வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தை முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது - கண்டி மாந­கர முன்னாள் முதல்­வர்

ண்டி லைன் பள்­ளி­வா­சலின் மினாரா (கோபுரம்) நிர்­மா­ணிப்­ப­தற்கு எனது பத­விக்­கா­லத்­திலும் அதற்கு பின்பும் கண்டி மாந­கர சபை­யினால் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

கண்டி நக­ரி­லுள்ள தலதா மாளிகை உலக மர­பு­ரிமை சொத்­தாகும். அதனால் அதன் உய­ரத்­தையும் மீறி வேறு மதஸ்­த­லங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட முடி­யாது என முன்னாள் கண்டி மாந­கர முதல்­வரும் கண்டி மகா விஷ்ணு தேவா­ல­யத்தின் பஸ­நா­யக்க நில­மே­யு­மான மகேந்­திர ரத்­வத்த தெரி­வித்தார்.

லைன் பள்­ளி­வா­சலில் கோபு­ர­மொன்று அமைக்­கப்­ப­டு­வ­தற்கு சில வரு­டங்­க­ளுக்கு முன்பு இப்­பி­ரச்­சினை ஏற்­பட்­டது. இதற்கு தலதா மாளி­கையின் திய­வ­தனே நில­மேயும் பஸ­நா­யக்க நில­மேக்­களும் எதிர்ப்புத் தெரி­வித்­தனர். எதிர்ப்­புகள் மேலெ­ழுந்­ததன் கார­ண­மாக மினாரா நிர்­மாணப் பணிகள் நிறுத்­தப்­பட்­டன. தற்­போது மீண்டும் இந்த வேலையை ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள்.

இந்தப் பள்­ளி­வாசல் தலதா மாளி­கைக்கு 200 மீற்றர் தூரத்­தி­லேயே அமைந்­துள்­ளது.

உலக மர­பு­ரிமை சொத்­தான தலதா மாளிகை அமைந்­தி­ருக்கும் பகு­தியில் பள்­ளி­வாசல் நிர்­மா­ணத்­துக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டமை நல்­லி­ணக்­கத்­துக்கு சாத­க­மாக அமைந்­துள்­ளது.

ஆனால் சவூதி போன்ற முஸ்லிம் நாடு­களில் பௌத்த மதத்­துக்கும் ஏனைய மதங்­க­ளுக்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சவூதி அரே­பி­யா­வுக்குள் புத்த பெரு­மானின் படத்தைக் கூட எடுத்துச் செல்ல முடி­யாது என்­பதை முஸ்­லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் இலங்கையில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தை முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -