சேருநுவர வித்தியாலய மாணவர்களும், பெற்றோர்களும் உண்ணாவிரதம்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவெலி கம நவோதய வித்தியாலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களின் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் (29) இரவு 8 மணியளவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் 6.15 மணியளவல் உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்துக்கு வந்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெற்றோருடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்ததையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.


நேற்று முன்தினம் புதன்கிழமை (29) மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதம் இடம்பெற்று வந்தநிலையில் 36 - 42 வயதுகளையுடைய பெண்கள் இருவர் மயக்கமடைந்து சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


பின்னர் உக்கிரமடைந்த உண்ணாவிரதப் போராட்டம் வீதி மறியல் போராட்டமான உருவெடுத்ததையடுத்து சேருநுவர ஊடாக செல்கின்ற கொழும்பு - கண்டி- மட்டக்களப்பு-அம்பாறை வாகனங்கள் அனைத்தும்- தோப்பூர் ஊடாக அனுப்பப்பட்டன.


இதனையடுத்து சம்பவ இடத்துக்க விரைந்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் வாக்குறுதியளித்தையடுத்து இப்போராட்டம் கைவிடப்பட்டது.


மகாவெலி கம நவோத்ய வித்தியாலயத்தில் 443 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் நிலையில் இவ்வித்தியாலயத்துக்கு 28 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றபோதிலும் 20 ஆசிரியர்களே உள்ளனர். இன்னும் 08 ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரியே சேருநுவர மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக கடந்த திங்கட்கிழமையிலிருந்து (27) பெற்றோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -