கட்டுநாயக்க அதிவேக வீதியில் பிரசவம் - வீதி பொலிஸ் பிரிவு உதவி

ட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதிக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவின் கார் ஒன்றினுள் குழந்தை பிறந்த சம்பவம் ஒன்று கடந்த 7ஆம் திகதி பதிவாகியுள்ளது. இவ்வாறு பிறந்தது சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகளின் ஒரு ஆண் குழந்தை ஆகும்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

குறித்த தாய்க்கு பிரசவ திகதியாக எதிர்வரும் 23ஆம் திகதி வைத்தியர்களால் வழங்கப்பட்டிருந்தது. சம்பவம் நடைபெற்ற 7ஆம் திகதி, வைத்திய ஆலோசனைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு பயணிக்கும் சந்தர்ப்பத்தில் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் அவர்கள் பயணித்த வாகனம் அதிக வேகத்தில் பயணித்துள்ளது. அதனால் பெஹலியகொட வெளியேறும் பகுதியை அண்மித்த போது, வாகனத்தின் டயர் வெடித்ததால் அதிக அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாயின் வயிற்றில் குழந்தையின் பாதுகாப்புக்காக இருக்கும் நீர் பை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் போது வாகனத்தின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கி, ஏனைய வாகனங்களின் உதவி கோரியுள்ளார். என்றாலும் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

அச்சந்தர்ப்பத்தில் குறித்த இடத்திற்கு விரைந்து வந்த, அதிவேக வீதிக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவின் கார் ஒன்று. அவசர அவசரமாக கர்ப்பிணித் தாய் மற்றும் அவரது கணவர் ஆகியோரை பொலிஸ் காருக்கு ஏற்றிக்கொண்டனர்.

அதன் பின்னர் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் காரிலேயே கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

குறித்த தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -