எமது அரசியல்வாதிகள் பல முறை தோல்வியுற்ற பின்பும் மமதையுடன் செயற்படுகின்றனா் - எஸ்.எம் மறைக்காா்

அஷ்ரப் ஏ சமத்-
மது நாட்டில் தகவல் அறியும் சட்டமூலம் மக்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெறிய வரப்பிரசாதமாகும். இதன் மூலம் அனைத்து தகவல்களையும் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். 2001ஆம் ஆண்டில் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டமூலத்தினை முன் வைத்தாா். எனினும் இதனை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. என்றாலும் அது இப்போது சாத்தியமாகியுள்ளது. என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம் மறைக்காா் தெரிவித்தாா். 

கொலநாவையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டப் மக்களுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பணவாக 10ஆயிரம் ருபா உதவித் தொகையை வழங்கி வைத்து உரையாற்றுமபோதே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

அவர் அங்கு தொடா்ந்தும் உரையாற்றுகையில் -

பிரித்தானிய பிரதமா் டேவிட் கமருன் போன்று மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்க எமது நாட்டு அரசியல்வாதிகளும் முன் வரல் வேண்டும். எமது அரசியல்வாதிகள் இரண்டு அல்லது மூன்று முறை தோ்தலில் தோல்வியுற்ற பின்பும் மீண்டும் மக்கள் மத்தியில் வாக்கு வரம் கேட்கின்றனா். இவா்கள் மக்களது கருததுக்கு தலைவணங்காது மமதையுடன் செயற்படுகின்றனா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -