முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு அதன் தோற்றப்பாட்டை முன்னோக்கிச் செல்கின்றதா...?

கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸடீன்

ண்மைக் கால­மாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குள் இடம்­பெற்று வரும் சம்­ப­வங்கள் குறித்து கட்சித் தொண்­டர்கள் கவ­லை­ய­டைந்து வரு­கின்­றனர்.

கடந்த வருடம் கண்­டியில் நடை­பெற்ற பேராளர் மாநாட்டில் இது­வரை காலமும் யாப்பு விதி­க­ளின்­படி பதவி –வகித்து வந்த செய­லா­ளரின் பதவி –தகுதி நிலை களையப் பெற்று புதி­தாக ஆறு கட­மை­க­ளுக்­கான செய­லா­ளர்கள் நிய­மனம் செய்­யப்­பட்ட சம்­ப­வத்­தி­லி­ருந்து இன்­று­வரை தொட­ரான பிரச்­சி­னைகள் நடை­பெற்ற வண்­ண­முள்­ளன.

உச்­ச­பீ­டத்தில் தமது குரல்­களை உயர்த்திப் பேசு­ப­வர்­க­ளுக்கும் தலை­வ­ரினால் அர­சியல் அதி­கா­ரத்­துடன் கூடிய பத­வி­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டுவர் என்று ஏற்­க­னவே கூறப்­பட்டு பத­விகள் எதுவும் வழங்­கப்­ப­டாமல் ஏமாற்­றப்­பட்­ட­வர்­க­ளுக்கும் மாற்றுக் கட்­சி­யி­லி­ருந்து துடைத்தெறி­யப்­பட்­ட­வர்­க­ளுக்கும் வேறு வகையில் கட்சித் தாவல் மேற்­கொண்­ட­வர்­க­ளுக்கும் கட்சித் தலை­மைக்கு நெருக்கடி கொடுத்தவர்களுக்கும்­ பத­விகள் வழங்­கப்­பட்­ட­மை­யா­னது மூத்த போரா­ளி­க­ளுக்கு விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளது.

புதிய செய­லா­ளர்கள் பத­வி­களில் அநே­க­மா­னவை அம்­பாறை மாவட்­டத்தை மையப்­ப­டுத்தி வழங்­கப்பட்­டதன் மூலம் செய­லாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலியின் மக்கள் செல்­வாக்­கையும் உயர்­பீட உறுப்­பி­னர்கள் மத்­தியில் அவ­ருக்­குள்ள முதுமைப் போராளி என்ற கௌர­வத்­தையும் கலைத்­து­விட எடுக்­கப்­பட்ட முயற்சி என இக்­கட்­சியின் நடு நிலை­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

கண்டி மாநாட்டில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்­க­மைய செய­லாளர் நாய­கத்தின் பதவி நிலை தொடர்­பான தகுதி நிலை குறைக்­கப்­பட்ட போதிலும் தேர்தல் ஆணை­ய­த்தின் சட்­ட­திட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு புதிய நிய­ம­னங்­களில் ஏற்று பொருத்­தப்­பா­டாக அமைந்­தாலும் கட்­சியின் செய­லாளர் நாய­கத்தின் சட்ட அதி­கா­ரமும் வலு­வுள்­ள­தான நிலையில் தேர்தல் திணைக்­கள நட­வ­டிக்­கை­களில் இரு செய­லா­ளர்­களின் பதவிப் போட்டி நடை­பெற்ற வண்ணம் இருக்­கின்­றது.

மேலும், அம்­பாறை மாவட்­டத்தில் கடந்த மார்ச் மாதம் பால­மு­னையில் நடை­பெற்ற கட்­சியின் வரு­டாந்த மாநாட்டில் செய­லாளர் நாயகம் பங்கு பற்­றா­மலும் கட்­சியின் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் இடை நடுவில் வந்து கலந்து கொண்­டி­ருந்த நிலையில் தேசியத் தலைவர் ஹக்கீம் செய­லாளர் நாயகம் ஹஸன் அலி­யையும், தவி­சாளர் ஹசன் அலி­யையும் தமது பேச்சின் ஊடாக குத்திப் பேசிக் கொண்­டி­ருந்­த­மை­யா­னது கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்த போரா­ளி­களின் இத­யங்­களை நொறுங்கச் செய்­தன.

இதே மாநாட்டில் கட்­சியின் பொறுப்பு வாய்ந்த பத­வியில் தொடர்ச்­சி­யாக இருந்து வந்த இரு பிர­பல்­ய­மிக்க மௌல­வி­மார்கள் மீது கொண்­டு­வ­ரப்­பட்ட தற்­கா­லிக இடை நிறுத்தம் அகில இலங்கை ரீதியில் முஸ்லிம் விவ­கா­ரங்கள் தொடர்­பாக ஆரா­யப்­படும் சமய, சமூக நிறு­வ­னங்கள் என்­ப­வற்றின் முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரின் நட­வ­டிக்­கை­களை விமர்­ச­னத்­துக்­குள்­ளாக்­கிய நிலையில் தற்­போது இடை­நி­றுத்தம் வாபஸ் பெறப்­பட்­டுள்­ளது.

வரு­டாந்த மாநாட்டில் கட்சித் தலைவர் ஹக்கீம் ஊட­க­வி­ய­லா­ளர்­களைக் கொச்­சைப்­ப­டுத்தும் வித­மாக ஆற்­றிய உரை நல்­லாட்­சிக்­கான அர­சாங்­கத்தில் ஊட­கத்­துறை மீது பொறுப்பு வாய்ந்த ஒரு சமூ­கத்தின் சார்­பான கட்சித் தலைவர் மட்­டு­மின்றி அரசின் பங்­காளிக் கட்­சியின் தலைவர் ஒருவர் பேசக் கூடிய பேச்­சல்ல.

இவ்­வா­றான நிலையில் இப்­போது இன்­னு­மொரு பிர­ளயம் ஏற்­படப் போகும் அறி­கு­றிகள் வெளிப்­பட்­டுள்­ளன. உள்ளூர் அர­சியல் கள நி.ைல­வ­ரத்தைப் பொறுத்­த­மட்டில் இந்த விடயம் முக்­கிய அம்­ச­மாக பேசும் பொரு­ளாக உரு­வெ­டுத்­துள்­ளது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும் நீண்­ட­கால பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் இவ்­வாரம் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யின்­படி இனி ஒரு­போதும் பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் ஈடு­படப் போவ­தில்லை என்று மிகவும் காட்­ட­மான முறையில் அறிக்கை விடுத்­துள்ளார். இவ்­வ­றிக்­கையில் மாகாண, தேசிய ரீதியில் கட்சி அர­சியல் ரீதி­யா­கவோ தனிப்­பட்ட ரீதி­யா­கவோ அல்­லது எதிர்­கா­லத்தில் ஏற்­படப் போகும் தேர்தல் சட்ட விதி­க­ளுக்­க­மை­வான பிர­தி­நி­தித்­துவம் மூல­மா­கவோ இனி ஒரு போதும் பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலைச் செய்யப் போவ­தில்லை என்று பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் தான் மர­ணிக்கும் வரை கட்­சியின் கடைத் தொண்­ட­னாக இருந்து பணி­யாற்றப் போவ­தாக சூளு­ரைத்து சுதந்­திர புரு­ஷ­ராக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ளார்.

தவி­சாளர் இவ்­வா­றான அறிக்­கை­களை விடு­வ­தற்கு மூல காரணம் இல்­லா­ம­லு­மில்லை. செய­லாளர் ஹஸன் அலியின் பதவி நீக்­கத்தைத் தொடர்ந்து கட்­சியின் மூத்த போராளி ஒரு அநீதி இடம்­பெற்று விட்­டது என்­ப­தற்­காகப் பல தட­வைகள் தமது கருத்­துக்­களை சுதந்­தி­ர­மாக வெளி­யிட்டு வந்தார்.

பஷீர் சேகு­தா­வூதீன் ஆழ­மான கருத்­துக்கள் கட்சித் தொண்­டர்­க­ளி­டையே மிகுந்த கவ­னத்தை ஈர்த்­தி­ருந்த நிலையில் அவ­ருக்கு எதி­ரான நெருக்குவாரங்­களும் கட்­சியின் உயர் மட்­டத்­தி­னரால் முன்­வைக்­கப்­ப­டா­மலும் இல்லை. இவ்­வா­றான நிலையில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்­மையில் கலந்து கொண்ட கூட்டமொன்றில் ­சிலர் தன்­மா­வட்­டத்­தைச்­சேர்ந்­த­வரை தோற்­க­டிக்க முற்­பட்­டனர் மட்­டு­மன்றி தனது ஊரைச் சேர்ந்­த­வ­ரையும் தோற்­க­டிக்க முற்­பட்­டனர் என்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தையும் ஏறா­வூ­ரையும் முற்­ப­டுத்தி கதை­களை கட்­ட­விழ்த்து விட்­டதன் எதி­ரொ­லி­யா­கவே தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் மேலும் கடுப்­பா­யி­ருக்க வேண்டும். அதன் வெளிப்­பா­டுதான் பஷீரின் பிர­தி­நி­தித்­துவ அர­சியல் தொடர்­பான அறிக்கை.

உண்­மை­யா­கவே கட்­சிக்குள் நடக்கும் அநி­யா­யங்கள் தொடர்­பாக யாரா­வது ஒருவர் குரல் கொடுத்தால் அவர் கட்­சிக்குத் துரோகம் இழைக்கக் முற்­ப­டு­கின்றார். கட்­சிக்கு எதி­ரான சக்­தி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து விட்டார். கட்­சியை அழிப்­ப­தற்குச் சதி செய்­கின்றார் என்று உண்­மை­யான நன்­னோக்கங் கொண்­ட­வர்கள் மீது பழி சுமத்­தப்­ப­டு­வது கடந்த 16 வரு­டங்­க­ளாக அவ்­வப்­போது நடை­பெற்று வரும் சம்­ப­வங்கள்.

இந்தப் பழி சுமத்­தலில் செய­லாளர் நாயகம் ஹஸன் அலி, தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் என நீண்ட பட்­டியல் உள்­வாங்­கப்­பட்­டன. மேலும் தேசிய பட்­டியல் எம்.பி. பத­விக்கு ஆசைப்­ப­டு­கிறார். தூதுவர் பத­விக்கு ஆசைப்­ப­டு­கிறார் என்று மேல­திக பழி­களும் துரோ­கி­க­ளுடன் சேர்த்து வழங்­கப்­படும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை உர­மூட்டி வளர்த்­தெ­டுத்­த­வர்­களில் பஷீர் சேகு­தாவூத் தன்­னா­லான பங்­க­ளிப்பைச் செய்த ஒருவர். மறைந்த தலைவர் அஷ்­ர­பு­டைய காலத்­தி­லி­ருந்து இது­வரை கட்­சிக்­காக உழைப்­பவர்.

இவ்­வா­றான கௌர­வங்கள் இவர் மீது அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டாலும் கட்சித் தலை­வ­ருக்கும் இவ­ருக்கும் இருந்த பனிப்போர் கார­ண­மாக கட்சித் தலை­வ­ருக்குத் தெரி­யாமல் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் பத­வியைப் பெற்றுக் கொண்­டவர் என்ற குற்­றச்­சாட்டும் முக்­கி­ய­மான தேர்­தல்­களின் போது கட்சிக் கட்­டுப்­பாட்­டையும் மீறி தன்­னிச்­சை­யாகச் செயற்­ப­டு­பவர் என்ற குற்­றச்­சாட்­டுக்­களும் நிரூ­பிக்­கப்­பட்ட உண்­மைகள் என்­ப­தையும் அனைவரும் நன்கு அறிவர்.

இருப்­பினும் மறைக்­கப்­பட்ட பல உண்­மை­களும் பல்­வே­று­பட்ட தொடர்­பு­களும் தலை­வ­ருக்கும் தவி­சா­ள­ருக்கும் இடையே தாமரை இலை மேற் நீர் துளிகள் போன்று இருக்­கின்ற உற­வுகள் இனிமேல் பனிபோல் உருகி எல்­லாமே வெளிச்­சத்­துக்கு வரும் என்ற நிலைப்­பாடு இப்­போது ஏற்­பட்­டுள்­ளது.

ரவூப் ஹக்கீம் கட்சித் தலை­வ­ராக அமைச்­ச­ராக இருந்­த­போ­திலும் சாதா­ர­ண­மாக மனி­த­னுக்­குள்ள பலம், பல­வீ­ன­மெல்லாம் உள்­ளன. இந்த வகையில் அரசில் ரீதி­யான தனிப்­பட்ட ரீதி­யான தக­வல்கள் தலைவர் தொடர்பில் கசியத் தொடங்கும் என்­பதில் எவ்­வித ஐய­மு­மில்லை.

கடந்த ஆட்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து அதி­காரம் கைமா­றி­யதன் பின்னர் அவர்­களின் கடந்த கால நட­வ­டிக்­கைகள் மக்கள் மூக்கின் மீது விரலை வைக்கும் அள­வுக்கு இருந்­துள்­ளன என்­பது எவ்­வ­ளவு யதார்த்தம் என்­பது கண்­கூடு.

மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் முன்னாள் கல்­வி­ய­மைச்சர் காயிதே மில்லத் மர்ஹும் பதி­யுதீன் மஹ்மூத் முஸ்லிம் சமூ­கத்­துக்கு செய்த பணிக்கு பின்னர் அதி­க­ளவில் பல்­வேறு பணி­களைச் செய்­தவர்.

தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழகம், ஒலுவில் துறை­முகம், இளைஞர் யுவ­தி­க­ளுக்­கான துறை­முக தொழில் வாய்ப்­புக்கள், புனர்­வாழ்வு நட­வ­டிக்­கைகள் என பல்­வேறு சாத­னை­களைப் புரிந்­தவர். இவ­ரது சாத­னை­களில் மிகவும் பிர­தா­ன­மான ஒரு விடயம் விகி­தா­சாரத் தேர்தல் முறையின் வெட்டுப் புள்ளி 12.5% தை 5% மாகக் குறைத்­தமை சாதா­ரண ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து ஜனா­தி­பதி அபேட்­ச­க­ரான ஆர். பிரே­ம­தா­ஸ­விடம் பேரம் பேசி காரி­யங்­களை வென்­றெ­டுத்­தவர். இதனால் நாட்­டி­லுள்ள சிறு­பான்மைக் கட்­சிகள் தமது பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்த சந்­தர்ப்பம் கிடைத்­தது. மர்ஹும் அஷ்ரப் உயி­ரோடு இருந்த காலம்­வரை நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்­மைக்கு தனது கட்­சியின் மூலம் பங்­க­ளிப்பு செய்­தவர். பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­திலும் சந்­தி­ரிகா பண்­டா­நா­யக்க குமா­ர­துங்­கவை பிர­த­ம­ராக அர­சாங்கம் அமைப்­ப­தற்கும் ஒத்­து­ழைப்பு வழங்கி சந்­தர்ப்ப சூழ்­நிலை அர­சி­யலை தனக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி காரி­யங்­களை வென்­றெ­டுத்­தவர்.

அவர் கட்­சியை வழி நடாத்­திய காலத்தில் கட்­சிக்கு துரோகம் இழைக்க முற்­பட்ட அல்­லது கருத்து முரண்­பாடு கொண்ட ஒரு­வரைப் புறந்­தள்­ளி­னாலும் எல்­லோ­ரையும் அர­வ­ணைத்துச் சென்­ற­தனால் சக்தி பெற்ற மனி­த­ராக விளங்­கினார்.

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வ­ராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமைப் பதவி வகித்த காலத்­தி­லி­ருந்து பலர் அவ­ருடன் முரண்­பட்டு வெளி­யேறி தனிக் கட்சி தொடங்­கினர். ஏ.எல். அதா­வுல்லா, ரிஷாட் பதி­யுதன், அமீர் அலி, ஹிஸ்­புல்லா என இந்தப் பட்­டியல் நீண்ட கார­ணத்­தி­னாலும் கட்­சியின் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களின் எண்­ணிக்கை 50% த்தால் குறைந்து தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களின் எல்­லை­களும் சுருங்­கி­விட்ட நிலையில் தற்­போது அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செல்­வாக்கு குறித்த இடங்­களில் காலூன்றி வரு­கின்­றது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் கூட தமது கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீது நம்­பிக்­கை­யீ­னத்தை வெளிப்­ப­டுத்­திய தலைவர் மீண்டும் அதே உறுப்­பி­னர்­க­ளையே நம்பி மண்­டி­யிட வேண்­டிய நிலைக்­குத்­தள்­ளப்­பட்­ட­துடன் தேசியப் பட்­டியல் விவ­கா­ரத்­திலும் கட்­சியின் முக்­கிய பதவி வகித்த செய­லாளர், பிரதிச் செய­லாளர் ஆகி­யோர்­களின் பெயர்கள் தேசியப் பட்­டி­யலில் இடம்­பெற்­றி­ருந்த போதும் தமது சகோ­த­ர­னையும் தனது நண்­ப­ரையும் நிய­மனம் செய்தார். இதன் மூலம் அவரின் நம்­பிக்­கையின் தாராளத் தன்­மையை அறிந்து கொள்­ளலாம்.

(தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -