யாழ் முஸ்லிம்கள் ஒற்றுமைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் - யாழ் பிரதேச செயலாளர்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளரை வரவேற்கும் விஷேட நிகழ்வு இன்று (3-06-2016) யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சிவில் சமூகத்தினரால் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஜனாப் எம்.எம்.எம்.நிபாஹிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் உபதலைவர் மௌலவி அப்துல் அஸீஸ், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அய்யூப் அஸ்மின், முன்னைய நாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் ஷரபுல் அனாம், யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத் தலைவர் ஜமால் மொஹிதீன், ஜனாப் கே.எம்.நிலாம், ஜனாப். எம்.யூ.எம்.தாஹிர், ஜனாப் எம்.எல்.லாபிர் யாழ் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் ஜனாப் அஷ்ரப் ஆகியோர் விஷேட அதிதிகளாக பங்கேற்றனர்.

இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் திரு. பொண்ணம்பலம் தயானந்தா அவர்கள்; 

யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் குறித்து நான் உரிய கவனம் செலுத்திவருகின்றேன், கடந்தகாலங்களில் இடம்பெற்ற குறைபாடுகளை நிவர்த்திக்க என்னால் முடியுமான முயற்சிகளை நான் மேற்கொள்வேன், எனக்கு முன்னால் உரை நிகழ்த்திய வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அஸ்மின் அவர்கள் உங்களுடைய பிரச்சினைகளை அழகிய முறையில் முன்வைத்தார்; 

அவை குறித்து முன்னமே எனக்குத் தெரியும் இப்போது அவற்றை எவ்வாறு நிவர்த்திக்கலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும், உரிய அரச நடைமுறைகளை நான் பின்பற்றவேண்டும், அதற்காக மக்களின் கஷ்டங்களுக்கு தீர்வு சொல்லக் கூடாது என்று குறிப்பிடவில்லை, கொள்கை வகுப்பாளர்களிடத்தில் உங்களுடைய பிரச்சினைகளை எத்திவைத்து ஒரு சில கொள்கைசார் தீர்மானங்களை நாம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு அரசியல் தலைவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

மக்கள் என்ற ரீதியில் நீங்கள் ஒருவிடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்; ஒற்றுமை மிகவும் பிரதானமானது, வெளிநாட்டுக்குச் சென்றால் எம்மை இலங்கையர் என்றுதான் அழைக்கின்றோம்; இலங்கையில் நின்றால் எமது ஊர்களைச் சொல்லி எம்மை அடையாளம் செய்கின்றோம், ஊருக்குள் வந்தால் வீதிகளைச் சொல்லி எம்மை அடையாளப்படுத்துகின்றோம், பின்னர் அதிலும் வேற்றுமைகளை முன்வைக்கின்றோம். இப்படியாக நாம் இயல்பாகவே வேற்றுமைகளை நோக்கிச் செல்கின்றோம், 

இது தவறு 2000ற்கும் அதிகமான முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்திற்காக யாழ்ப்பாணத்திலே பதிவு செய்திருக்கின்றார்கள். அதிலும் ஒரு 500 குடும்பங்களே இங்கே வசிக்கின்றார்கள். அதற்குள்ளும் முரண்பாடுகளும் வேற்றுமைகளும் கூர்மையடைந்தால் அது சிறப்பானதாக இருக்காது. ஒற்றுமைக்கு முதலிடம் கொடுங்கள்

உங்களுடைய சமூகத்திலே அரசியல் வேற்றுமைகள் இருக்கின்றன, ஆனால் அந்த வேற்றுமைகள் எவ்வித நன்மையும் தரப்போவதில்லை; உங்களுடைய சமூகத்திலிருந்து பலர் என்னை வந்து சந்திக்கின்றார்க, இணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் என்று அவர்கள் வருகின்றார்கள், அது நல்ல விடயம், ஆனால் அதன் மூலம் மக்களைப் பிரித்தாள எவரும் முயலக்கூடாது.

உங்களுடைய வீட்டுத்திட்டம், காணி சார்ந்த பிரச்சினைகள் பாரிய பிரச்சினைகளாகவே இருக்கின்றன. வாழ்வாதாரம், சமுர்த்தி போன்ற விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வு காணுதல் அவசியமாகும். சுகாதாரம், சூழல் பாதுகாப்பு, மின்விநியோகம், வடிகாலமைப்பு போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவமளித்து நாம் செயற்படவேண்டும்.

இன்று இவ்வாறான ஒரு வரவேற்பை நான் எதிர்பார்த்திருக்கவில்லை “யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சிவில் சமூகம்” சிறப்பான முறையில் இவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்கு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்றும் குறிப்பிட்டார்.

தகவல்.என்.எம்.அப்துல்லாஹ்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -