சிலாவத்துறை மக்கள் வங்கி விவகாரம் : றிசாத் பதியுதின் அவர்களே...!

முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-

முசலிப் பிரதேசத்திலுள்ள 30 கிராமங்களின் தலைநகர் சிலாவத்துறை ஆகும். முத்துக்குளித்த காலத்தில் எகிப்து தொடக்கம் ஜரோப்பாவரை இதன் புகழ்பரவியது.துரிதமாக வளர்ந்து வந்த சிலாவத்துறை வடபுலத்தில் பொருளாதாரத் தடை நிலவிய காலத்தில் தொண்ணூறுகளில் பொருட்களை வழங்கியதை மறக்க முடியாது.பலவந்த வெளியேற்றத்தின் பின் நகர் கடற்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.கட்டிடங்கள் யாவும் அழிந்தன.2002 இல் கணிசமான முஸ்லிம்கள் மீள்குடியேறி இருந்தும் அருவியாற்றுக்குத் தென்பகுதி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை.

  2009 இல் பிரதேசம் மீட்கப்பட்டு, மக்களிடம் குறிப்பிட்ட பிரதேசம் ஒப்படைக்கப்பட்டது.சிலாவத்துறையின் இதயப்பகுதி இன்னும் விடுவிக்கப்படவில்லை.நகர் முன்னேறத் தவழ்கிறது.25 வருட வளர்ச்சியில் பின்னோக்கிச் சென்றுள்ளது.வங்கிகளின் தேவைகுறித்து பலமுறை இணையத்தில் செய்தி வெளியிட்டபின் அரச வங்கியான மக்கள் வங்கி திறக்கப்பட்டமை பாராட்டத்தக்கது.குடியேறிய மக்களின் தொகை போதாமை,நகரின் குறைவிருத்தி போன்றவற்றால் ஏனைய அரச,தனியார் வங்கிகள் களமிறங்கப் பயந்தன.

    இருக்கின்ற மக்கள் வங்கியும் ஏ.ரி.எம். மெசினைப் பொருத்த இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை ஒருவருக்கு விடுமுறை நாட்களில் அல்லது இரவில் பணம் தேவை என்றால் என்ன செய்வது.இவ்விடயம் பலமுறை பேசப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் .ஒரு தனியார் வங்கி சிலாவத்துறையில் திறக்கப்பட வேண்டும்.

    பெட் காட்டைத் தனது பையில் வைத்துக் கொண்டு தகவல் தொழினுட்பத்தை பயன்படுத்த இம்மக்களுக்கு உரிமை இல்லையா ?உடனடியாக ஏ.ரி.எம். மெசினைப் பொருத்த மக்கள் வங்கியின் வட பிராந்தியபபணிப்பாளர் நடவடி;க்கை எடுப்பாரா ?

நகர அபிவிருத்தி,நீர்வழங்கல் அமைச்சு யாரின் கையில் உள்ளது. அவருக்குச் சிலாவத்துறையின் தொன்மையும் புரியுமா? மாதிரி நகராக ஏன் மாற்றமுடியாது.என்னை அபிவிருத்தி செய்ய வடக்கே அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுவதில்லை.கிழக்கே அமைச்சர் அதாவுல்லா விடுவதில்லை.இக்கதையைக் கேட்டுக்கேட்டுப் புளித்துவிட்டது.இனியும் இக்கதை வேண்டாம்.வாக்குகளைப் பெற வருகிறீர்கள்தானே,ஏன் அபிவிருத்தி செ;ய்ய வரமுடியாது.

 நகரம் வளர்ந்தால் பல அரச,தனியார் வங்கிகள் போட்டிக்கெர்ண்டு சிலாவத்துறை நகருக்கு வரும் அதனால்தான் நகர அமைச்சரையும எம் நகரின்பால் நகர்த்த முயன்றுள்ளேன்.வன்னிமாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் அமைச்சருமாகிய றிசாத் பதியுதின் அவர்கள்  எ.ரி.எம்.மெசின் சிலாவத்துறையில் துரிதமாகப் பொருத்த உரிய அதிகாரிகளைப் பணிக்க வேண்டுமென மக்கள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -