சாய்ந்தமருது வீ கெயார் போ யு பவுண்டேசனின் கௌரவிப்பு நிகழ்வு...!

ஹாசிப் யாஸீன்-
ல்முனை, சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களில் பல வருடகாலமாக முஅத்தினாக கடமையாற்றியவர்களை கௌரவித்தலும் வீ கெயார் போ யு பவுண்டேசனின் ஸ்தாபத் தலைவர் மர்ஹூம் அபூவக்கரின் நினைவுப் பேருறை நிகழ்வும் சாய்ந்தமருதிலுள்ள வீகெயார் போ யு பவுண்டேசன் காரியாலயத்தில் நேற்று (17)வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வீ கெயார் போ யு பவுண்டேசனின் தலைவர் ஏ.எம்.சர்ஜூன்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சுகாதார பிரதிஅமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பச் செயலாளர் எம்ஏ.பழீல், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.மைமுனா,சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் செயலாளர் எம்.ஏ.மஜீத், கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை ஹபீப் வங்கியின் முகாமையாளர் எம்.எம்.அன்வர் உள்ளிட்ட உலமாக்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது முஅத்தின்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுச் பரிசுவழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வீ கெயார் போ யுபவுண்டேசனின் அங்கத்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இப்தார் மற்றும் இராப்போசன நிகழ்வுகளும் இடம்பெற்றன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -