சாய்ந்தமருது - எம்.எஸ்.எம்.சாஹிர்-
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் முகமாக சாய்ந்தமருது ஜாமிஉல்- இஸ்லாஹ் தௌஹீத் ஜும்ஆப்பள்ளிவாசலினால்
சாய்ந்தமருது பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட 1இலட்சத்து 35ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் மற்றும் 1இலட்சத்து 55 ஆயிரம் பெறுமதியான பணமும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஊடாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம்.இனாமுல்லாஹ் மற்றும் ஜமாஅத்தின் முக்கிய பிரமுகர் மௌலவி ஏ.கலீலுர்ரஹ்மான் ஆகியோர் கையளிப்பதையும் அருகில் பள்ளிவாசலின் அங்கத்தவர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம்.