கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பார்வையிடும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இதன்படி நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவருக்கும், ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்காவைப் பார்வையிட முடியும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 29 ஆளுனர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள் இருந்த குறித்த மாளிகை வரலாற்றில் முதன் முறையாக மக்கள் பார்வைக்கு திறக்கப்படவுள்ளது என்பது விஷேட அம்சமாகும். இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களை 077 30 86 366 என்ற கைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.