சிங்கப்பூர் - இலங்கை இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவெடுக்கப்படும்...!

காதர் முனவ்வர்-
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரைவில்முடிவெடுக்கப்படும் என்று சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்தெரிவித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக மற்றும்தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கடந்த புதன்கிழமை 1ஆம் திகதி கிங்ஸ்பெறி ஹோட்டலில்வைத்து இலங்கையின் சிரேஷ்ட அமைச்சர்களினை சந்தித்து உரையாற்றுகையிலேயே இதனைதெரிவித்தார்.

வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் வணிக வாய்ப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பிலும் இரு தரப்புநாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் அவரின் விஜயம் அமைந்தது.

அனைத்தையும் உள்ளடக்கிய, நவீனத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும்பலனடையும் என்று ஆரம்பகட்ட ஆய்வுகள் உறுதியாகத் தெரிவித்தன. ஒப்பந்தம் விரைவில் முடிவாவதுதொடர்பான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.வர்த்தகர்களுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நீடித்து நிலைத்திருக்கும் பங்காளித்துவத்தைஏற்படுத்திக்கொள்ளவும் இவ் விஜயம் அமைந்ததாக ஈஸ்வரன் கூறினார்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கைப் பிரதமர் சிங்கப்பூர் வந்திருந்தபோது, தடையற்ற வர்த்தகஒப்பந்தம் தேவை என்று கேட்டுக்கொண்டதை அவர் சுட்டிகாட்டினார்.

இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி வேகம் பாராட்டுக்குரியது, ஆசியாவின் முக்கிய பிராந்தியமாகஇலங்கையும் மாறிவருவது எமது இரு நாட்டு வர்த்தக மேம்பாடுகளுக்கு மிகவும் வலு சேர்ப்பனவாகஅமைந்துள்ளது என்றும் கூறினார்.

துறைமுகம் மேம்பாடு, குடிநீர் திட்டம், நிதித்துறை முதலியவற்றில், முதலீடுகளை ஈர்ப்பதில், இலங்கைஅரசு ஆர்வமாக உள்ளது. இங்கு முதலீடு செய்வோருக்கு தேவையான உதவிகளை, அரசு செய்துதருவதாக உறுதி அளித்துள்ளது.

இலங்கை சுற்றுலாத் துறையின் மீது சிங்கப்பூர் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால், சிங்கப்பூர் தமதுமுதலீட்டாளர்களை இலங்கைக்கு அனுப்புவதில் விருப்பம் கொண்டுள்ளதை தான் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன் என்றார்.

2015 இல் சிங்கப்பூரின் 39 ஆவது மிகப் பெரிய வர்த்தக பங்குத்தாரராக இலங்கை இருந்ததாகவும், இருதரப்பு நாடுகளையும் வலுப்படுத்த 2.05 பில்லியன் டொலர் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு, சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 2பில்லியன் வெள்ளி எட்டப்பட்து.

சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதியான பொருட்களின் மதிப்பு, 1.9 பில்லியன் வெள்ளியும்இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதியான பொருட்களின் மதிப்பு 146 மில்லியன் வெள்ளியும் ஈட்டப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு சிங்கப்பூர் 656 மில்லியன் டொலரை இலங்கைக்கு நேரடியாகமுதலீடு செய்ததாக சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிங்கப்பூர் சர்வதேச நிறுவனம், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் ஆகியவற்றின் தலைமையில்28 சிங்கப்பூர் நிறுவனங்களைச் சேர்ந்த வர்த்தக பிரதிநிதிகள், இலங்கையில் வர்த்தக வாய்ப்புகளைஆராயவுள்ளதாகவும் மற்றும் தங்களது ஒத்துழைப்பை வழங்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இச்சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகவும் சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவெடுக்கப்படும் என உறுதியளித்தபட்டதாகவும் இலங்கையில் சுற்றுலாத் துறையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இருநாட்டு உறவினை வளர்ச்சியடைய செய்வது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக கைத்தொழில் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -