நிந்தவூர் கிரான் கோமாரி விவசாயிகளின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்ப்படுத்தும் நோக்கில் ஹக்கீமுடன் ஒன்றுகூடல்



கிரான் கோமாரி விவசாயிகள் அமைப்பினுடைய பிரதிநிதிகளும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஆரிப் சம்சுடீன் அவர்கள் குறித்த கோமாரியில் அமைந்துள்ள 146 முஸ்லிம் விவசாயிகளுடைய பிணக்கு தொடர்பில் அவர்கள் 1980 ஆண்டுளில் இருந்து குறித்த காணிகளில் உட்செல்ல முடியாமல் கடந்த முப்பது வருடங்களாக கையிழந்து 1954 ஆம் ஆண்டில் அரசினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தின் மூலம் செய்து வந்த காணிகளை கையிழந்து அல்லப்பட்டு வருகின்ற இச் சந்தர்ப்பத்தில் அவர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் (அல் ஹாஜ்) ரவுப் ஹகீம் அவர்களுடன் ஓன்று கூடல் ஒன்றினை ஏற்ப்படுதியிருந்தனர். 

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் அவர்கள் உடனடியாக அம்பாறை மாவட்டச் செயலாளர் அவர்களுடன் வருகின்ற ஜூலை 15 அல்லது 16 ஆம் திகதிகளில் ஒரு சந்திப்பை ஏற்ப்படுத்தி இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை பெற்றுக் கொள்வதற்க்கும் இது தொடர்பில் ஏற்க்கனவே பாராளுமன்ற பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழுவில் இருந்து செய்யப்பட்ட முடிவுகளையும் மற்றும் பாராளுமன்ற நிறுவாகதிற்க்கான ஆணையாளரினால் இது தொடர்பில் செய்யப்பட்ட்ட விசாரணைகளுக்கான அறிக்கையையும் பெற்றுக் கொண்டு இந்த நல்லாட்சியின் ஆட்சிக்காலதினை பயன்படுத்தி உடனடியாக உடனடியாக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தலைவர் அவர்கள் உடனடியாக வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்களை பணித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

இச் சந்திப்பின் பொழுது கிரான் கோமாரிபாமஸ் விவசாய அமைப்பினுடைய தலைவர் உமர் அவர்களும் அதனுடைய பிரதிநிதி ஜப்பார் அவர்களும் கலந்துகொண்டார்கள்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -