சலீம் றமீஸ்-
அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தினால் கடந்த ஐந்து(05) வருடங்களாக புனித ரமழான் மாதத்தில் தொடர்ச்சியான ஹதீஸ மஜ்லீஸ் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக இந்த வருடமும் நோன்பு மாதத்தில் ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வினை நடாத்துவதற்கான ஏற்பாடாக சிரமதான நிகழ்வு நடாத்தப்பட்டது.
ஹதீஸ் மஜ்லீஸ் நடைபெறும் அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி உள்ளிட்ட கோணாவத்தை இரு மருங்கிலும் இந்த மாபெரும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
அல் இபாதா கலாசார மன்றத்தின் தலைவர் மௌலவி யு.எம்.நியாஸி (உதவிக் கல்வி பணிப்பாளர்) அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அல் இபாதா கலாசார மன்றத்தின் ஸ்தாபகரும், போசகருமான முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், அட்டாளைச்சேனை அபிவிருத்தி குழுவின் தலைவரும், மன்றத்தின் தவிசாளருமான ஓய்வு பெற்ற அதிபர் ஏ.சி.சைபுதீன், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அல் அர்ஹம் வித்தியாலயங்களின் அதிபர்கள், மாணவர்கள், உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்களும், மன்றத்தின் உயர்பீட உறுப்பினர்கள், ஆயுட்கால அங்கத்தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.