எப்.முபாரக்-
தம்பலகாமம் பிரதேசத்திற்க்கு உட்பட்ட கால்பந்து விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான புஹாரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் (Buhari Foot Ball Primier League) இறுதிச் சுற்று போட்டி நிகழ்வு நேற்றையதினம் (3) சமீர் அலி தலைமையில் ஈச்சநகர் விளையாட்டு மைதானத்தில் முள்ளிபொத்தானை புஹாரி அணிக்கும், நாலாம் வாய்க்கால் முகமதியா அணிக்கும் இடையில் இடம்பெற்றது .
ஒன்றுக்கு ஒன்று என்ற சமநிலையில் முடிவடைந்த இப்போட்டி பெனால்டி முறையில் முகமதியா அணி வெற்றி பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் அவர்கள் வெற்றி பெற்ற முகமதியா அணிக்கு வெற்றி கிண்ணத்தை வழங்கியதுடன் புஹாரி அணிக்கு ரூபாய் 5,௦௦௦/= பணத்தையும் வழங்கி வைத்தார்.
இப் போட்டியின் பிரமுகர்களாக ஐயுப் கான், வாகித் (ஆசி),SLMC மத்திய குழு தலைவர் நசீர் கான் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.