பேரிச்சம்பழங்கள் களவு - பள்ளிவாயலுக்கு பொலிஸ் பாதுகாப்பு (வீடியோ)

யாழ் முஸ்லீம் மக்களிற்கு வழங்கப்பட்ட பேரிச்சம் பழங்கள் ஒரு தொகை காணாமல் போனதால் மக்கள் கோபமடைந்து யாழ் பெரிய முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்துடன் முரண்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் குறித்த பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது. இதன் போது நிலைமையை சமாளிக்க மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக அப்பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் சமய விவகார அமைச்சினால் யாழ் முஸ்லீம் மக்களிற்கு வழங்கப்பட்ட 125 பெட்டி பேரிச்சம் பழங்களில் 45 கிலோ பெட்டிகள் திடிரென காணாமல் போனதாக மக்கள் அறிந்ததை அடுத்து பள்ளிவாசலை சுற்றி வளைத்தனர்.

பின்பு பேரிச்சம்பழத்தினை ஏற்றி வந்த தரப்பு காணாமல் போன பேரிச்சம்பழங்கள் யாழ் மாவட்டத்திற்கு அடுத்ததாக உள்ள கிளிநொச்சி மக்களிற்கு வழங்குவதற்கு எடுத்து வைத்ததாக குறிப்பிட்டு மாலையில் அவற்றை மீளவும் பள்ளிவாசலுக்கு பாரப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரைக்கும் குறித்த பேரிச்சம் பழங்கள் பள்ளிவாலுக்கு ஒப்படைக்கவில்லை. எனினும் அந்த 45 பெட்டி பேரிச்சம் பழங்களிற்கு என்ன நடந்நது என இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மக்களின் கருத்துப்படி கே.கேஎஸ் பள்ளிவாசல் நிர்வாகி என தன்னை கூறுபவரும்,பருத்தித்துறை பள்ளிவாசல் நிர்வாகி என கூறுபவரும் தான் அவற்றை எடுத்துச்சென்றதாக ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.

அமைச்சினால் பெரிய முகைதீன் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட பேரிச்சம் பழங்கள் அங்கு களஞ்சியப்படுத்தி பகிர்ந்தளிக்காமல் அவற்றை கொண்ட வந்தவர்கள் இடைநடுவில் அபகரித்துவிட்டு பள்ளிவாசல்களுக்கு வழங்கியதாக கூறிவருவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் பாதுகாப்பு அங்குபலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -