கைக்குண்டுத் தாக்குதலில் இறந்த 41 வயதுடைய பெண் தவறான காதல் உறவில் ஈடுபட எதிர்ப்புத் தெரிவித்தமையாலே, 54 வயதுடைய நபர் கைக்குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை 10.55 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்நிலையிலேயே குறித்த குண்டுத்தாக்குதலுக்கான காரணம் வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த 41 வயதுடைய பெண்ணுடன் தவறான காதல் உறவில் ஈடுபட குண்டை வெடிக்கவைத்த 54 வயதான நபர் முயற்சித்துள்ளதுடன், அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தால் குறித்த நபர் இவ்வாறு கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்ட நபருடன் சம்பவ இடத்தில் இருந்த மேலும் ஒரு பெண்ணும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கைக்குண்டு தாக்குதலில் தவறான காதல் உறவில் எதிர்ப்பு தெரிவித்த பெண் மற்றும் 9 வயது சிறுமி காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதனையடுத்து குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வெடிகுண்டை வெடிக்கச்செய்த நபர் ஹிம்புடான பங்சவத்த பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவராவார். சம்பவ இடத்தில் உயிரிழந்த பெண் தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடையவராவார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.