எப்.முபாரக்-
திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பு திறப்பதற்கான வசதிகளை திருகோணமலை நகர் பள்ளிவாயல்களினால் உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் பிரசாத் ஹேமந்தவின் அனுமதியுடன் கைதிகளுக்கு பேரிச்சம்பழங்கள்,சீனி,மாவு வகைகள்,தினமும் கஞ்சி மற்றும் பழ வகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை சிறைச்சாலையில் நாற்பது முஸ்லிம் கைதிகள் நோன்பு நோற்று வருகின்றார்கள். ஒவ்வொரு வருடமும் கைதிகளுக்கான நோன்பு திறப்பதற்கான வசதிகளை திருகோணமலை நகர பள்ளிவாயல்களினால் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.