நான் இராஜினாமா செய்வதாக இன்று ஊடகங்களில் வெளியான செய்தியை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் என்று இராஜாங்க அமைச்சர் பெளஷி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
நான் பதவியை இராஜினாமா செய்து எனது பதவியை முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு வழங்கவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தது. இது உண்மைக்குப் புறம்பான செய்தி அவ்வாறு எதுவும் நடக்காது அப்படியான எந்தவித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இன்று ஜனாதிபதி மாளிகையில் இராஜாங்க அமைச்சர் பெளஷியை இம்போட்மிரரின் பணிப்பாளர் சந்தித்து கேட்டபோதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.