அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டின் பேரில் அம்பாறை மாவட்டத்திற்கான கட்சியின் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலய மைதானத்தில் இன்று ( 24) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருமான றிஸாத் பதியுதீன் , கடசியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப் , கட்சியின் முக்கியஸ்தர்கள் , உலமாக்கள் , கல்வியாளர்கள் , வர்த்தக பிரமுகர்கள் , இளைஞர்கள் என ஆயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர்.