குளிர்பானங்களில் சுவைக்காக சேர்க்கும் கசகசா உபயோகிக்க வேண்டாம் அது ஒரு போதை பொருள் என முகநூல் மற்றும் வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிவரும் நிலையில் இந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் ஜம்மியத்துல் உலமா பத்வா குழு இணைப்பாளர் ஹாரிஷ் ரஷாதி கருத்து வெளியிட்டுள்ளது.
கசகசா என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் உணவுப் பதார்த்தம் உண்மையில் போதைப்பொருள் அல்ல.
இது ஓபியம் செடியின் விதையுமல்ல.
ஓபியம் செடியின் விதைக்கு உலகில் பல்வேறு நாடுகளில் “கசகசா” என்ற பெயர்தான் வழங்கப் பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தக் குழப்பம்.
உண்மையில் நாம் உட்கொள்வது இந்த கசகசா அல்ல.
“கசகசா” என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் விதையின் சரியான பெயர் கசகசா அல்ல ..
“ஸப்ஜா” என்பது தான் இதன் பெயர்.
இதை ஆங்கிலத்தில் Sweet Basil Seeds என்று அழைப்பார்கள்.
இது உண்மையில் ஒரு மருந்துச் செடி. துளசி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரத்தின் விதையைத் தான் நாம் குளிர்பானங்களில் கலந்து பருகுகிறோம்.
இது முற்றிலும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒரு மருத்துவக் குணம் கொண்ட, முற்றிலும் ஹலாலான ஓர் உணவுப் பதார்த்தமாகும்.
போதை வஸ்த்துவின் விதைக்கு வழங்கப்படக்கூடிய “கசகசா” என்ற பெயரைத் தவறுதலாக நாம் எமது வழக்கத்தில் இந்த ஹலாலான உணவுப் பதார்த்தத்துக்கு வழங்கி வருகிறோம். என குறிப்பிட்டார்.