திருமலை கண்டுள்ள துடிப்பான இளம் அரசியல் இரத்தம் இம்ரான் மஹ்ரூப்...!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு எவறாலும் அழிக்க முடியாத அரசியல் வரலாறுகள் காணப்பட்டாலும்., திருகோணமலை மாவட்டத்து மக்களின் அரசியல் இருப்புக்களையும் 30 வருட யுத்தத்தினால் கல்வி, கலாச்சரம், வியாபாரம், விவசாயம், மீன்பிடி என சகல துறைகளிலும் பாதிக்கப்பட்டுள்ள சகல மக்களினதும் உரிமைகளுக்காக இன ,மத, மொழி எனும் வேறுபாட்டிற்கு அப்பால் அரசியலில் நின்று உழைக்க கூடிய துடிப்பான இளம் இரத்ததின் தேவைபாடானது திருகோணமலை மக்களுக்கு இருந்து வந்த பெரும் குறையாகவே காணப்பட்டது. 

அந்த குறையினை எவ்வாறாவது நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் தனது தந்தையிடம் கற்ற அனுபவத்தினை தனது ஆயுதமாக கையிலே எடுத்து இம்முறை நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 32 வயதுடைய இளைஞனாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக களமிறங்கி அதிகப்படியான இளைஞர்களினுடைய வாக்குகளினால் பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்திருப்பவர்தான் இம்ரான் மஹ்ரூஃப். 

இளம் துடிப்புள்ள இரத்தமாக பாராளுமன்ற கதிரையில் உட்கார்த்திருக்கும் இம்ரான் மஹ்ரூஃப் திருமலை மாவடத்தின் எதிர்கால அரசியல் வரலாறு என்பது இம்ரான் மஹ்ரூபினுடைய அரசியல் நடைமுறைகளிலிருந்து தெளிபடுத்தும் விடயமாக இருந்து வருகின்றமை முக்கியமான விடயமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் 1983ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 17ம்ஆம் திகதி கிண்ணியாவில் பிறந்தார் இவர் கிண்ணியாவின் செல்வாக்குமிக்க பாராம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது பூட்டனார் மாஹத் ஹாஜியார் 1800 காலப்பகுதிகளில் கிண்ணியாவின் மிகப்பெரும் செல்வந்தராக காணப்பட்டார் முத்துக்குளித்தல், யானைபிடித்தல், யானைத்தந்தம் விற்பனை செய்தல், இவர்களின் பரம்பரை தொழிலாகும். கிண்ணியாவின் பெரும்பகுதி நிலம் இவருக்கே சொந்தமாக காணப்பட்டது. 

இந்நிலங்களின் பெரும்பகுதி திருகோணமலை முழுவதும் பாடசாலைகள் மதரசாக்கள் மையவாடிகளுக்கு இவரின் வாரிசுகளால் அன்பளிப்பு செய்யப்பட்டன என்ற வரலாற்றினை தற்கால இளம் சமூதாயத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தெளிபடுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும்.

இம்ரான் மஹரூபின் பூட்டனார் எகுத்தார் ஹாஜியார் கிண்ணியாவின் முதல் அரசியல் பிரமுகராவார் 1931 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்க அதிபர் தோமஸ் கிரகம் விண்டளினால் கிண்ணியாவின் முதலாவது கிராமசபை தலைவராக நியமிக்கப்பட்டார். இதன்பின் நடைபெற்ற இரன்டு கிராமசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தொடர்ச்சியாக பல வருடங்கள் கிராமசபை தலைவராக கடமையாற்றினார். அத்தோடு திருகோணமலை மாவட்டத்தில் வாக்குரிமை பெற்ற முதலாவது முஸ்லிம் இவராவார்.

இம்ரான் மஹரூபின் பெரிய தந்தை எம் ஈ எச் முகம்மது அலி 1952 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தனது 25 ஆம் வயதில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். 16 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றினார். தந்தையின் அரசியல் பிரவேசத்தினாலே இம்ரான் மஹ்ரூப் தானும் அரசியலில் கால்பதிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.

இம்ரான் மஹரூபின் தந்தை எம் ஈ எச் மஹரூப் தனது 25 (1964)ஆம் வயதில் கிண்ணியா பட்டினசபை தேர்தலில் போட்டியிட்டு அதன் தலைவராக தெரிவானார். அதன்பின் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு அவர் கொலை செய்யப்படும் வரை தொடர்ச்சியாக இருபது வருடங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக சேவை புரிந்தார். 

இக்காலபகுதியில் மன்னார் மாவட்ட அமைச்சர் அதன்பின் துறைமுகங்கள் கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் என அரசியலில் படிப்படியாக உயர்ந்தார்.
1997 ஆம் ஆண்டு இனந்தெரியாத சிலரால் இறக்கண்டி செல்லும் வழியில் சுட்டுக்கொள்ளப்பட்டத்தைத் தொடர்ந்து இம்ரான் மஹரூபின் குடும்பம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தது.

இம்ரான் மஹ்ரூபினுடைய ஆரம்ப காலத்தினை பார்க்கப்போனால் தனது கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலை காலப்பகுதியில் கல்வி விளையாட்டு என அனைத்துத்துறைகளிலும் திறமையை வெளிப்படுத்தினார். பாடசாலை கிரிக்கெட் உதைபந்தாட்ட அணிகளில் இடம்பிடித்து றோயல்கல்லூரி சார்பாக பல போட்டிகளில் பங்கேற்றார். றோயல்கல்லூரி சாரணர் இயக்கத்தின் அங்கத்தவராக பல தலைமைத்துவ செயலமர்வுகளில் பங்குகொண்டார். 

தனது தலைமைத்துவ ஆற்றலை வளர்பதற்கு றோயல் கல்லூரியே முக்கிய காரணம் என பல கூட்டங்களில் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்து வருகின்றமையானது தான் ஏழை மக்களினுடைய கண்ணீரினை எவ்வாறு மாவடத்தில் துடைக்க முற்படுகின்றேனோ அதைப் போன்றே தேசிய அரசியலில் இருக்கின்ற அரசியல்வாதிளினுடன் கைகோர்த்து பக்குவமானதாகவும் அரசியல் சானக்கியத்துடனும் மாவட்டத்திற்கு சகல அபிவிருத்திகளையும் எதிர்காலத்தில் ஏற்படுத்த முடியும் என்பதனை நிரூபிக்கின்றது.

தனது பள்ளிப்படிப்பை முடித்த பின் கொழும்பு பல்கலைகழகத்தில் வணிக முகாமைத்துவம் Business Management டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்திசெய்தார். அத்தோடு வங்கியியல் Banking கற்கைநெறியையும் பூர்த்திசெய்து தனியார் வங்கியொன்றில் பணிபுரிந்தார். தனது தந்தையின் மறைவின் பின் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தாலும் இக்காலப்பகுதியில் தனது தந்தையின் நினைவாக எம் ஈ எச் மஹரூப் பௌண்டேசன் யை ஆரம்பித்து அதன்மூலம் திருகோணமலை மக்களுக்கு சிறு சிறு உதவிகளை புரிந்தார். 

இதன் மூலம் இலவச கருத்தரங்குகள் பல நடாத்தப்பட்டன அத்துடன் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன இதில் பெரும்பாலான உதவிகள் அவரின் சொந்த நிதியில் இருந்தே செய்யப்பட்டன.

இவ்வாறு இருக்கையிலே 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மகிந்த அரசு வெற்றி பெறும் சூழ்நிலைகளே காணப்பட்டன. இதனால் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்தை பெறும் வாய்ப்பே காணப்பட்டது. இச்சூழ்நிலையில் திருகோணமலையில் ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்தது கேட்பதாக முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவை எதிர்த்த அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி மூதூர் தொகுதி அமைப்பாளரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தார்.

இதனால் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போடட்டியிடுமாறு கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து இம்ரான் மஹரூபுக்கு யாருமே எதிர்பார்க்காத திடீர் அழைப்பு கிடைத்தது. தந்தை மரணித்ததில் இருந்து அரசியலில் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்த இம்ரானுக்கு இவ்வாய்ப்பை ஏற்பதா இல்லையா என்ற குழப்பநிலை காணப்பட்டது. எனினும் தந்தையின் ஆதரவாளர்களின் தொடர் வற்புறுத்தலால் இவ்வாய்ப்பை ஏற்றுகொண்டார். அவ்வாய்ப்பினை ஏற்றுக்கொண்டதினால் அத்தேர்தலில் அவர் பிரதானமாக இரு சவால்களை எதிர்கொண்டார் .

மக்கள் முன் அறிமுகம் இல்லை தந்தையின் அகால மரணத்தின் பின் அரசியலே வேண்டாம் என கொழும்பில் தங்கி விட்டதால் அரசியல் தொடர்பான எந்த செயற்பாடுகளையும் இம்ரான் மஹ்ரூப் தனது இளமைக் காலத்தில் திருகோணமலையில் முன்னெடுத்திருக்கவில்லை. இதனால் இவரின் குடும்பத்தை தவிர வேறு எவருக்கும் இவரின் பெயர்கூட தெரிந்திருக்கவில்லை.

அத்துடன் தேர்தலுக்கு வெறுமனே 28 நாட்கள் மட்டுமே காணப்பட்டன. இக்குறுகிய நாட்களுக்குள் இவரை திருகோணமலை முழுவதும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை இவருக்கும் இவருடய அரசியலுக்கு தோள் கொடுத்த நண்பர்களுக்கும் பெரும் சவாலாக காணப்பட்டது. தான் எதிர் நோகியுள்ள சவாலினை முறியடிக்க இம்ரான் தலைமையில் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. 

இம்ரான் சென்ற இடமெல்லாம் அமோக வரவேற்பு பெரியவர்கள் பலர் கண்ணீருடன் இவரை கட்டியனைத்தனர் அப்பொழுதுதான் அனைவருக்கும் புரிந்தது MEH மஹரூப் MP இவ்வுலகத்தை விட்டுச் சென்றாலும் அவர் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் என்ற தந்தையினுடைய அழிக்க முடியாத அரசியல் வரலாறு.

இந்த கண்ணீர் இம்ரானின் மனதினை மாற்றியதுடன் தனது தந்த இவ்வுலகத்தினை விட்டுச் சென்று பல வருடங்கள் சென்று தந்தைக்காக இன்னும் கண்ணீர் வடிக்கின்ற மக்களுக்காகவும் மாவட்டத்திலுள்ள சகல மக்களினது அரசியல் உரிமைகளுக்காவும் அன்று முதல் முழுமூச்சாக பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அத்தேர்தலில் 19,665 வாக்குகளை பெற்று சிறு வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றம் செல்லும் வாய்பை இழந்தமையானது துரதிஸ்ட்டமாகும். ஆனால் இவர் பெற்ற வாக்குகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்பது கின்னியாவில் மட்டுமல்ல முழு திருகோணமலைக்குமே இம்ரன் எனும் அந்த இளைஜனின் பால் வடுயும் முகத்தினை ஞாபகப்படுத்தும் தேர்தலாக மாற்றியது. 

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் படுதோல்வி அடைந்த நேரத்தில் வெறும் 28 நாட்களில் வெற்றியை அண்மித்தது எல்லா அரசியல்வாதிகளுக்கும் பெரும் செய்தியினை கூறக்கூடிய தேர்தலாகவே திருகோணமலையில் 2010ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தல் காணப்பட்டது.

இத்தேர்தலில் இம்ரான் மஹ்ரோஃப் தோல்வியடைந்தமைக்கு இரண்டு பிரதான காரணங்களை கூறலாம். ஐக்கிய தேசியக் கட்சிசார்பாக முஸ்லிம் காங்கிரசில் தேர்தலில் போட்டியிட மறுத்த அப்போதைய மூதூர் தொகுதி ஐக்கியதேசிய கட்சி அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப் சுதந்திர கட்சி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அப்போது பரவலாக பேசப்பட்டது. 

இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு வழமையாக அளிக்கப்படும் வாக்குகள் சில இம்ரானுக்கு கிடைக்காமல் சென்றமையானது திருகோணமலையில் 2010ம் ஆண்டைய தேர்தல் வரலாற்றில் கருப்பு மையினால் எழுதப்பட வேண்டிய விடயமாகும்.

மிகக்குறுகிய நாட்கள் பிரச்சாரம் செய்ததால் மாவட்டத்தின் எல்லா பகுதிகளுக்கும் இம்ரான் மஹ்ரூபினால் செல்ல முடியவில்லை. சில பகுதிகளில் இம்ரான் போட்டியிடுகிறார் என்றே தெரியாத நிலைமையே காணப்பட்டது. இவ்விரண்டில் ஒரு காரணியாவது இம்ரான் மஹ்ரூபிற்கு அன்ரு சாதகமாக இருந்திருந்தால் இம்ரான் 2010 ஆண்டு பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்த்திருப்பார் திருகோணமலை அரசியலில் எழுதப்பட்ட வரலாறாக இருக்கின்றது.

இதை தொடர்ந்து 2012 இல் நடந்த மாகாணசபை தேர்தலில் தனது தந்தையின் அரசியல் முகவரியான அதே ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டார். அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இம்ரானும் அப்துல்லா மஹ்ரூபும் பிரதான வேட்பாளராக போட்டியிட்டனர். இருவருக்கும் பலத்த போட்டி நிலவியது. 

இறுதியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு திருமலையில் ஓரு ஆசனமே கிடைக்கப்பெற்றது இம்ரான் மாவட்டத்தில் முதலிடம் பெற்று பிரதான வேட்பாளராக தன்னுடன் சேர்ந்து போட்டியிட்ட அப்துல்ல மஹ்ரூபிற்கு பாடம் புகட்டியதை போல் கிழக்கு மாகாணசபையின் கதிரையில் உட்கார்ந்து தனது அரசியல் பயணத்தினை நம்பிக்கையுடன் ஆரம்பித்தார்.

மாகாணசபையில் இவரின் செயற்பாடுகளினால் அடுத்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் எப்படியும் வெற்றிபெறுவார் என்ற எதிர்வு கூறல் மாவட்டம் முழுவதும் பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விடயமாக காணப்பட்டது. 2015 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து திருகோணமலையில் ஐக்கிய தேசிய கட்சி இரண்டு ஆசனங்களை வெற்றி பெரும் சூழ்நிலை காணப்பட்டது. 

எனினும் ஐக்கிய தேசிய கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சேர்ந்து போட்டியிட முன்வந்ததால் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளரே நிறுத்த முடியும் என்ற நிலை உருவானது. இதனால் இம்ரான் மஹ்ரூபிற்கும் அப்துல்லா மஹ்ரூபிற்கும் ஆசனத்தை பெறுவதில் கடும் போட்டி நிலவியது என்பது கட்சிக்குள் பூகம்பமாய் வெடிக்கு உட்பூசல் அளவிற்கு பாரிய பிரச்சனையாக மாறியிருந்தனை நான் நேரடியாக கண்டிருக்கின்றேன். இறுதியில் இம்ரானுக்கே போட்டியிட சந்தர்பம் வழங்கப்பட்டது இதனால் அப்துல்லா மஹ்ரூப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டார்.

ஆனால் தேர்தல் மேடைகள் அனைத்திலும் நான் ஐக்கிய தேசிய கட்சி சார்பாகவே போட்டியிடுகின்றேன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணையவில்லை என தெரிவித்தார். ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் உட்பட உறுப்பினர்கள் அப்துல்லா மஹ்ரூபுக்காக வாக்கு சேகரித்தனை பரவலாக அவதானிக்க கூடியதாக இருந்தது. 

அதற்கு ஒரு படி மேலாக மூதூரினை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்பு செய்து வருவாதாக மூதூரிலே தனக்கென வாக்கு வங்கியினை வைத்திருக்கும் திடீர் தெளபீக் கூட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இணைந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு மூதூர் பிரதேசத்திலே பகிரங்க தடை விதித்தமையினால் அதிக பெரும்பான்மையான ஆதரவு மூதூர் பிரதேசத்தில் தேர்தலில் அப்துல்லா மஹ்ரூபிற்கே கிடைத்தது. 

இதனால் தேர்தல் காலங்களில் வாக்களிப்பிற்கு முன்னராக அப்துல்லா மஹ்ரூபின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட விடயமாகவே பலராலும் கணிக்கப்பட்டிருந்தது.

அப்துல்லா மஹ்ரூஃப் வெற்றிபெற்ற பின் அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பாடார். அத்தோடு இவருக்கு ஐக்கியதேசிய கட்சி சார்பாக ஆசனம் வழங்கப்படவில்லை என்ற விடயம் தேர்தலின் பின் நடைபெற்ற இலங்கை மக்கள் காங்கிரஸ் கூடங்களில் உறுதியானது. தேர்தல் காலங்களில் இவர் இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்ததை மறுத்ததற்கு பிரதான காரணம் அவர் ஐக்கிய தேசிய கட்சி இல்லை என அப்போதே கூறியிருந்தால் காலகாலமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வரும் மக்கள் அப்துல்லா மஹ்ரூபிற்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். 

ஆகையால் அவர் அத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்க முடியாது. இதனால் அப்துல்லா மஹ்ரூஃப் ஐக்கிய கட்சியின் வாக்குகளுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாக்குகளை சேர்த்து பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தையும் இம்ரான் மஹ்றூஃப் மாவட்டத்தில் இரண்டாமிடத்தையும் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள்.

இம்ரான் மஹ்ரூப்ன் வெற்றியானது மிகப் பெரிய போராட்டத்திற்கு மத்தியில் பெறப்பட்ட வெற்றியாகும். இம்ரான் மஹ்ரூபின் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது அவர் அனைவரையும் அரவணைக்கும் பன்பும், யாரிடமும் கோபப்படாத குணமுமாகும். ஆனால் ஆதரவாளர்களின் தியாகம்தான் தனது வெற்றிக்கான பிரதான காரணம் என முதன்மைப்படுத்தி இம்ரான் மஹரூப் கூறுவதானது தனக்கு திருகோணமலை மாவட்டத்தில் வாக்களித்த மக்களை தனது மரணம் வரைக்கும் மனதில் வைத்திருப்பேன் என்பதனை உறுதிப்படுத்தும் விடயமாக இருக்கின்றது. 

எந்த வித எதிர்பார்ப்புமின்றி தேர்தல் காலங்களில் இம்ரான் மஹ்ரூபின் அதரவாளர்களும் அவருடன் கூடவே இரவு பகலாக விழித்திருந்து தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட இளைஞர் படையணியும் இம்ரான் மஹ்ரூபின் வெற்றிக்கு அத்திவாரமிட்டது என்பதும் மாற்றுக்கருதில்லாத உண்மையாகும்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு தான் மாகாண சபையில் இருக்கின்ற பொழுது எவ்வகையான வேலைத்திட்டங்களை தனக்கிருந்த அதிகாரத்தின் மூலம் மாவட்டத்திற்கு செய்ய முற்பட்டாரோ அதவிட பல மடங்கு தனக்கு வக்களித்த மக்களுக்காவும் தனது மாவட்ட மக்களுக்காகவும் இன, மத, மொழி எனும் வேறு பாட்டிற்கு அப்பாற் சென்று அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றார். 

பொதுவாக இம்ரான் மஹ்ரூப் முன்னால் மறைந்த ஜனாதிபதி ஆர். பிரமதாசவின் பாணியில் ஏழை மக்களினுடைய அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மாவட்டத்தில் இருக்கின்ற அபிவிருத்தி அடையப்படாத வீதிகளுக்கெல்லாம் சென்று மக்களினுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்து வருவதானது மாவட்டத்திலே நிச்சாயமாக எதிர்காலத்தில் தனக்கென அழிக்க முடியாத அரசியல் வரலற்றினை உறுவாக்கியே தீரூவார் என்பதை நிகழ் காலத்திலேயே திட்டவட்டமாக கணிப்பிடக் கூடிய விடயமாக இருக்கின்றது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -