அட்டாளைச்சேனையில் சற்றுமுன் விபத்து - ஒருவர் பலி

மத்திய நிருபர் - அட்டாளைச்சேனை

ம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று (01) புதன்கிழமை மாலை 03.00 மணியளவில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுவர் ஒருவர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை கால்நடை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இவ் விபத்தில் இறந்தவர் வீதியை கடக்க முற்பட்ட போது கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற கார் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை 08ம் பிரிவைச் சேர்ந்த ஜே. ஜெம்ஸத் (வயது-12) என்ற மாணவனே இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


றிசாத் ஏ காதர் 









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -