இப்தார் நிகழ்வு வன்முறையாக காட்டப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசே காரணம் - அன்வர்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

டந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை புல்மோட்டையில் கிழக்கு மாகான சபை உறுப்பினரான மொஹமட் அன்வரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஃப்தார் நிகழ்வொன்றில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அப்துர் ரவூப் ஹக்கீம், முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்த இஃப்தார் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கும் முக்கியஸ்தர்களுக்கு இஃப்தாருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நோன்பு திறப்பதற்காக உட்கார்ந்திருந்த சிறுவர்களை அநாகரீகமான முறையில் விரட்டப்படும் காணொளியானது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

குறித்த விடயம் சம்பந்தமான உண்மை நிலையினை அறிந்துகொள்ளும் பொருட்டு இஃப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மொஹமட் அன்வருக்கு தொடர்பினை ஏற்படுத்தி வினவிய பொழுது புல்மோட்டை பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த இஃப்தார் நிகழ்வில் சீருவர்கள் உட்கார்ந்த்திருந்த இடமானது அதீதிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 

இதனால் சிறுவர்களுக்கு ஏற்கனவே பிரத்தியேகமாக ஒதுக்கப்படிருந்த இடங்களுக்கு சிறுவர்களை அனுப்ப முற்படும் பொழுது அங்கே வந்திருந்த எங்களது கட்சியின் மீது காற்புணர்ச்சி கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவாளர்கள் சிலரினால் கைத்தொலை பேசிகளில் காணொளியாக்கப்பட்டு எனக்கும், எங்கள் கட்சிக்கும் களங்கள் விளைவிக்கும் வகயிலே அது மிகவும் நுனுக்கத்துடன் சரி செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதவிவேற்றப்பட்டுள்ளது. இவ்விடயத்தினை பார்க்கின்ற பொழுது புல்மோட்டையில் இருக்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களின் வங்குரோத்து அரசியலினை திரையிட்டு காட்டுவதாக அமைகின்றது.

மேலும் மாகாண சபை உறுப்பினர் குறித்த இஃப்தார் நிகழ்வினை பற்றி கூறிகையில்..... எனக்கும், எனது கட்சியின் தலைமைக்கும், முதலமைச்சருக்கும் களங்கம் விளைக்கும் விதத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவாளர்களினால் திட்டமிட்டு குறித்த கணொளியானது உறுவாக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்கில் பரப்பப்பட்டு வருகின்றமைக்கு தங்களிடம் தகுந்த ஆதாரம் இருப்பதாக தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் அன்வர் புனித ரமழான் காலத்தில் இவ்வாறு கீழ்தரமான முறையில் நடந்து கொண்டமையானது மனவேதனை அளிக்க கூடிய விடயமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அத்தோடு அங்கு சிறுவர்கள் எவ்வாறு கவனிக்கபட்டார்கள் என்பது சம்பந்தமாக குறித்த காணொளியானது முழுமையான முறையில் வலைத்தளங்களில் பதி வேற்றம் செய்யப்படவில்லை என்பதும் முக்கிய விடயமாகும். சில நொடிப்பொழுதில் இடம் பெற்ற அந்த சம்பவத்தினை ஒளிப்பதிவு செய்தவர்கள் உண்மை என்ன என்பதனை மறைத்து திரும்ப திரும்ப ஒளிபரப்பும் வகையில் எடிட் பண்ணி முகநூல்கள் மூலமாக பதிவேற்றம் செய்துள்ளார்கள்.

நாங்கள் ஒருபொ ழுதும் நாகரீகமற்ற முறையிலே எங்களுடைய கட்சியில் இருந்து கொண்டு இவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை என்றும் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டே குறித்த இஃப்தார் நடாத்தப்பட்டுள்ளது. அத்தோடு புல்மோட்டையிலே 450 குடும்பங்களுக்கான தூய குடி நீர் வினியோகத்தினை கடந்த காலங்களில் நானும் எனது கட்சியின் தலைமையும் பல சிரமங்களுக்கு மத்தியில் முன்னெடுத்திருந்தோம். அதனை எவ்வாறாவது இடை நிறுத்த வேண்டும் அல்லது அகில இலங்களை மக்கள் காங்கிரஸ்தான் 450 குடும்பங்களுக்குமான குடி நீர் வினியோகத்தினை ஏற்படுத்துகின்றது என்பதனை மக்களுக்கு காட்டுவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசானது கடும் முயற்சி எடுத்திருந்தது. இறுதியில் இறைவனின் நாட்டப்படி குறித்த சம்பவதினத்தன்று எங்களுடைய கட்சியின் தலைமையினால் 450 குடும்பங்களுக்குமான குடி நீர் வினியோகம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதனை பொறுத்துகொள்ள முடியாத அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவாளர்களே இவ்வாறு எங்கள் மீது சேரு பூவதற்காக இவ்வாறான ஒரு ஈன செயலினை முஸ்லிம் சமூகத்திற்கு காட்ட முற்பட்டுள்ளனர். பொதுவாக இப்தார் நிகழ்வுக்காக அழைப்பு விடுக்கும்போது நோன்பாளிகள் யார் நோன்பாளி அல்லாதவர்கள் யார் என்று பிரித்து பார்ப்பதில்லை. அத்துடன் முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வில் முஸ்லிம் அல்லாதவர்களையும், அரசியல் கட்சி பாராது முஸ்லிம் என்ற வகையில் அனைத்து கட்சிக்காரர்களையும் அழைப்பதும் ஒரு சம்பிரதாயமாகும். தற்பொழுது எமது நாட்டிலே அரசியல் மயமாகி கொண்டிருக்கின்ற இப்தார் நிகழ்வுகளை அகில இலங்கை மக்கள் காங்கிரசினர் அரசியல் கண்ணோட்டத்திலேயே பார்க்க முற்படுகின்றனர். ஒரு நிகழ்ச்சி நடாத்துவதென்றால் அதில் அதீதிகளுக்கும், பிரமுகர்களுக்கும் என்று பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டிருப்பதானது உலகில் நடக்கின்ற சர்வசாதாரன விடயமாகும். அது மட்டுமல்லமல் ஒரு நாட்டிலே இருகின்ற முக்கிய அமைச்சரும், முதலமைச்சரும் கலந்து கொள்ளும் பொழுது இவ்வாறான அதீதிகளுக்காக பிரத்தியேக இடம் ஒதுக்கப்படுவது வழக்கமான முறையாகும்.

சிறுவர்கள் அதீதிகளின் இடத்தில் உட்கார்ந்தற்கு பிற்பாடு அதீதிகளை வேறு இடத்தில் அமரச்செய்வதற்கு ஏற்பாடு செய்ய நேரம் போதாமயினாலும் வேறு வழியின்றி அந்த ஒருசில நொடிகளுக்குள் சிறுவர்களை வெளியேற்றும் பொருட்டு அங்கே செயற்பட்ட ஏற்பாட்டாளர்களுல் இருந்த ஒருவர் விரட்டி இருக்கின்றார். இவ்வாறு சிறுவர்களை வெளியேற்ற முற்பட்டவர் ஏற்பாட்டு குழுவில் உள்ளவரா அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளரா?. என்பது ஒரு பிரசனையாக இருந்தாலும் இதனை திட்ட மிட்டு காணொளியாக முகநூகளில் பதிவேற்றியது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதாரவாளகளே என்பது சம்பந்தமாக முழு ஆதாரமும் தங்களிடம் இருக்கின்றது 

யாரோ செய்த இந்த தவறுக்காக, அரசியல் நோக்கம் கருதி புனித ரமழான் மாதத்தில் தலைவர் ஹக்கீம் மீதும் இஃப்தார் ஏற்பாட்டு குழு மீதும் அபாண்டமான முறையில் வீன்பழி சுமத்தும் குறித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சகோதரர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இதனை தலைவர் ஹக்கீமோ, பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கோ, மாகாணசபை உறுப்பினரான நானோ அல்லது வேறு எந்த முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களோ செய்யவில்லை. அத்தோடு குறித்த இப்தார் நிகழ்வில் எந்த ஒரு சிறுவர்களும் நோன்பு திறக்காமல் வீடுகளுக்கு செல்லவுமில்லை. அனைத்து சிறுவர்களும் நன்கு உபசரிக்கப்பட்டதை இங்கே நான் ஞாபகப்படுத்தி கொள்வதோடு. உண்மையினை மறைத்து தங்களது சுயநல அரசியல் நோக்கம் கருதி இவ்வாறு வீண் பழி சுமத்துபவர்கள் மறுமையை பயந்துகொள்ளட்டும் என துள்ளியமாக ஒளிப்பதிவு செய்து பதிவேற்றியவர்களுக்கு முக்கியமாக கூறிகொள்ளவதாக தெரிவித்தார் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் அன்வர்.

குறிப்பு- குறித்த இஃப்தாரில் ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமாக இப்தார் ஏற்பாட்டாளரும் கிழக்கு மாகாண முச்லிம் காங்கிரஸ் உறுப்பினருமான மொஹமட் அன்வர் தொலை பேசியினூடாக நேரடியாக தந்த விளக்கமானது எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -