பாடசாலை கற்றல் உபகரணங்கள் கையளிப்பு...!

ண்மையில் ஏற்பட்ட வெள்ள இடரால் பாதிப்புற்று கல்விகற்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் “சோலேஸ்” (SOLACE) நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வு நேற்று (02.06.2016) மாபோல,வத்தளை அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் கல்லூரி முதல்வர் எம்.எச்.எம்.முசாதிக் தலைமையில் நடைபெற்றது.

தேசிய சூரா சபையின் நிறைவேற்று உறுப்பினர் நுஹ்மான் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில் இயக்கத்தின் தலைவர் எம்.எல்.எம்.தெளபீக் கெளரவ அதிதியாக கலந்துகொண்டதோடு கல்வி கற்பதன் அவசியத்தை மாணவர்களின் உள்ளத்தில் ஆழமாக பதித்தார்.

இயக்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி றுடானி ஷாஹிர் உட்பட மத்திய சபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இப்பாடசாலையில் கல்விகற்கும் பல்லின மாணவர்களுக்கும் சுமார் 05 இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -