வடமாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் கௌரவ ஜி .டி. லிங்கநாதன் மற்றும் வட மாகாணபோக்குவரத்து அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு. மயூரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாகநேற்றைய தினம் (09.06.2016 அன்று) கௌரவ அமைச்சர் அவர்களும், அதிகாரிகளும் குறிப்பிட்ட உமா மகேஸ்வரன்வீதியில் இருக்கின்ற சமணங்குளம் என்ற இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்தனர்.
குறிப்பாக மழை காலங்களில் குளத்தில் இருந்து குளத்தின் வான் பகுதி வழியாக வழிந்தோடுகின்ற நீரினால் குறித்தஇடத்தில் ஏறக்குறைய மூன்று அடி அளவிற்கு தண்ணீர் வீதியை குறுக்கறுத்து ஓடுவதனால் இந்த வீதியைபயன்படுத்தும் கோயில்குளம், சமணங்குளம், சிதம்பரபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 7000 குடும்பங்களின்போக்குவரத்து தடைப்படுவதுடன் பல்வேறு அசெளகரியங்களுக்கும் ஆளாகின்றனர் என அமைச்சர் அவர்களுக்குகுறிப்பிட்ட தரப்பினரால் சுட்டிக்கட்டப்பட்டது.
அதன் நிமித்தமே அமைச்சர் அவர்கள் குறித்த சம்பவத்தைசுட்டிக்காட்டிய உறுப்பினர்களுடன் அதிகாரிகள் சகிதம் பதிப்பிற்கு உள்ளாகும் இடத்தை பார்வையிட்டனர். குறிப்பிட்டபகுதியில் தற்பொழுதும் நீர் வீதியை குறுக்கறுத்து பாய்ந்துகொண்டிருக்கின்றது.
எனவே இந்த இடத்தில் பாலம்ஒன்று அமைக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது என்பதை உணர்ந்த அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்கு எதிர்வரும் வருடத்தில் முன்னெடுக்க உத்தேசித்துள்ள "கிராமிய ஆயிரம் பாலம்" திட்டத்தின் கீழ்சமணங்குளம் பாலத்தையும் உள்வங்குமாறு வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதமபொறியியலாளருக்கு அமைச்சர் அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஆகவே குறிப்பிட்ட கிராமிய பாலம் திட்டம்நடைமுறைக்கு வரும்போது இந்தப் பாலமும் புனரமைக்கப்பட்டு மக்கள் படுகின்ற அசெளகரியங்கள் விரைவில்நீக்கப்படும் என்பதையும் சுட்டி நிக்கின்றார் அமைச்சர் அவர்கள்.