எனக்கென்று ஒரு கொள்கையுள்ளது. அதற்கு இணங்கி செயற்பட யாரு முன்வந்தாலும் அவர்களுடன் இணைந்துகொள்வதற்கு தான் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இராணுவத்தினரைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று நேற்று (6) கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கடந்த அரசாங்கத்தின் இறுதிக் கட்டம் வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் நுாற்றுக்கு தசம் கணக்கிலாவது இந்த அரசாங்கம் முன்னெடுக்க வில்லை.
தனக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இரண்டாம் இடம் தருவதாக அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார். எனக்கு முதலாம் இடத்துக்கு வரவும் முடியும். எனது கொள்கைக்கே தான் முதலிடம் வழங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.