கொழும்பு வாழ் விதவைகளுக்கு நோன்பு உதவி...!

அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு வாழ் மாளிகாவத்தை, தெமட்டக் கொட, மருதானை, கிராண்பாஸ் வாழ் 500 முஸ்லீம் விதவைப் பெண்கள்,வறுமைக் கோட்டின் வாழ் பெண்களுக்கும் ஒரு மாத கால நோன்புக்கான உலா் உணவுப் பொருட்கள் தெமட்டக் கொட அல்-ஹிஜ்ரா வித்தியாலயத்தில் வைத்து (5) ஆம் திகதி பகிா்ந்தலிக்கப்பட்டன. 

ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ருபா பெறுமதியான சகா் உணவுக்கான பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை லண்டனில் உள்ள அல் இசான் ரஸ்ட் அமைப்பு இதனை அனுசரனை வழங்கியிருந்தது. 

கலாநிதி ஹரிஸ்டீன் அவா்களின் ஏற்பாட்டில் தெமட்டக் கொட ஓபன் இன் நீட் பவுன்டேசன் தலைவா் நிஸ்த்தாா் அனீஸ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம்.அஸ்வரும் கலந்து கொண்டு பொருட்களை கையளித்தாா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -