கண்டி பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு தடை உத்தரவு..!

ண்டி நகர மத்தியில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கோரி கண்டி மாநகர சபை ஆணையாளர் அனுப்பியுள்ள கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பள்ளிவாசல் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள “சிங்கலே” அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பள்ளிவாசலில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் சட்ட விரோதம் என மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளதாக “சிங்கலே” அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், பள்ளிவாசலின் “மினரா” கட்டுமானப் பணிகள் நடைபெற்றால், கண்டி நகரில் அமைந்துள்ள பௌத்தர்களின் புனித தளமான தலதா மாளிகையை விட அது உயரமாக அமையும் எனத் தெரிவித்து கடும்போக்கு பெளத்த அமைப்பான “சிங்கலே” அமைப்பு பள்ளிவாசல் முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி மாநகர சபை ஆணையாளரின் கடிதம் கிடைத்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -