இன்று முதல் பாடசாலைகளுக்கு நோன்பு கால விடுமுறை...!

நாட்­டி­லுள்ள சகல அர­சாங்க முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கும் புனித ரமழான் நோன்பு கால விடுமுறை இன்று வழங்கப்படுகின்றது. எதிர்­வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வியாழக்­கி­ழமை மீண்டும் இப்­பா­ட­சா­லைகள் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக திறக்­கப்­ப­டு­வுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாட­சா­லைகள் அபி­வி­ருத்திக் கிளையின் சிரே­ஷ்ட பணிப்­பாளர் இஸட். தாஜுதீன் தெரி­வித்தார். 

இதே­வேளை, கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரியவசத்தின் விசேட பணிப்பின் பேரில், இக்­காலப் பகு­திக்குள் அண்­மைய வெள்­ளத்­தி­னாலும் மண்­ச­ரி­வு­க­ளி­னாலும் இழக்­கப்­பட்­டுள்ள பாடப்­புத்­த­கங்­க­ளுக்குப் பதி­லாக புதிய புத்­த­கங்­களை அச்­சிட்டு வழங்க கல்வி அமைச்­சினால் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­துடன், இது­த­விர ஒவ்­வொரு மாணவ மாண­வ­ருக்கும் இரண்டு பாட­சாலை சீரு­டைகள் வீதம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இவர்­க­ளுக்குத் தேவை­யான பாட­சாலைப் பைகள் மற்றும் உப­க­ர­ணங்­களை இல­வ­ச­மாக வழங்க பல்­வேறு தொண்டு நிறு­வ­னங்­களும் நலன் விரும்­பி­களும் முன்­வந்­துள்ள நிலையில், இந்த நன்­கொ­டைகள் யாவும் கல்வி அமைச்­சினால் வலயக் கல்விப் பணிமனைகள் ஊடாக பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -