இரங்கிக் கொடு இனிக்கும் வாழ்வு.















ரோஷான் ஏ.ஜிப்ரி-



ல்லார்க்கு ஈர்ந்தளித்து இரங்கும் மனம்
இருப்பவர்க்கு வர வேண்டும் இங்கு தினம்
இல்லை என்று சொல்கின்ற ஈனக் குணம்
இல்லாத சந்ததிகளாய் வேண்டும் சனம்

***
***
கொள்கையில் சிறந்தவன் செயலின் தேர்வு
குறையற்று கொடுப்பான் இறைவன் தீர்வு
பணக்காரன் ஏழையென்ற ஏற்றத் தாழ்வு
பாராமல் இருந்தாலே உயரும் வாழ்வு

***
***

முடிசூடா மன்னனென இருந்தோர்களின்
முடிவுகளை பார்த்தாலும் இருப்பவர்கள்
பிடி போட்டு தான,தர்மம் செய்திடினும்
பிடிப்போடு செய்வதுவே சிறப்பாயாகும்
***
***
அதிகாரத் தோரணையில் அலட்சியமாய்
ஆருக்கும் கொடுத்துதவ இல்லாதோனாய்
ஊருக்குள் பேரெடுத்து சேர்த்த லாபம்
உபயோகம் அற்றுவரும் கூடிப் பாவம்
***
***
நீருக்குள் குமிழியென நிலமை மாறும்
நிற்கெதியாய் நாளையுன் வாழ்வு சோரும்
நாருக்கும் மணக்காத பூவாய் நீரும்
நகைப்புக்குள் இருப்பதால் என்ன நேரும்?

***
***
வள்ளலென பேரெடுக்க தேவையில்லை
வசதிக்குள் கொடுத்துதவ என்ன இல்லை
உள்ளதிலே பகிர்ந்தாலே பஞ்சமில்லை
உண்மையிதை உணர் நீயே உயர்வின் எல்லை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -