அழைப்பாணையை மறுத்தார் நாமல்...!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று காலை நிதி மோசடிகள் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுபிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

அவருக்குச் சொந்தமான சட்ட நிறுவனம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பெறுவதற்காகவே அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் நாமல் ராஜபக்சவுக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவின் விசாரணைகளுக்காக ஆஜராகவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணியான பிரேமநாத் சீ.தொலவத்த உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -