க.கிஷாந்தன்-
தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அட்டன் நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் தலவாக்கலை மெதடிஸ்ட் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலொன்று மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டர் சைக்கிளை செலுத்திய நபரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இந்த விபத்து 07.06.2016 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.