நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி வாக்களிக்க உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
உண்மையிலேயே இந்த அரசாங்கம் தமது இயலாமையைக் காட்டுகின்றது. இந்த வரி அதிகரிப்பானது கடனுக்காக போராடும் போராட்டம் என கூற முடியாது என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசு கடன் வாங்கியிருப்பதாக கூறி இந்த அரசு விளம்பரப்படுத்துகின்றது. அதைக் கண்டு நாம் ஏமாறத் தயாரில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு நிதி அமைச்சர் மற்றும் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அதை விட்டு தப்பிச்செல்வதென்பது முடியாது.
இது ரவி கருணாநாயக்கவுக்கு மாத்திரம் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அல்ல. முழு அரசுக்கும் எதிரான பிரேரணை என அறிவித்தார்.