”நல்லாட்சியில் திருடர்களை பிடிப்பது இப்படித்தான்” கோத்தபாய ராஜபக்ச

ற்போதைய அரசாங்கம் திருடர்களை பிடிப்பதாக கூறி தங்கள் குடும்பத்தினரையே பிடித்துள்ளதாகவும், உண்மையான திருடர்கள் தற்போதைய அரசாங்கத்தின்அமைச்சர்களாகவும், சிலர் அரசாங்கத்தின் சாட்சியாளர்களாகவும் மாறியுள்ளதாகவும்முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி முன்னெடுத்துள்ள திருடர்கள் பிடிக்கும் செயற்பாடு குறித்து கருத்துதெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருடர்கள் தங்கள் ஆட்சியைப் போலவே , தற்போதைய ஆட்சியிலும்இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு சில தினங்களுக்கு முதல் தான் சோபித்த தேரரைசந்தித்த போது வெளிநாட்டு சேவைகளில் வெளிநாட்டவர்கள் அதிகம் சேவையில்இருப்பதாகவும், இது நமது நாட்டுக்கு நல்லதில்லை என்றும் இந்த செயன்முறையைமாற்றுமாறும் கோரி தன்னிடம் கூறி கவலைப்பட்டதாகவும் தெரிவித்த கோத்தா, இங்குள்ளபலர் சிறந்த நாட்டுக்கு சேவையாற்றியவர்கள் இருப்பதாக சிலரின் பெயரை தான்தேரரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கோத்தா தெரிவித்துள்ளார்.

மேலும் எமக்கு எதிராக குரல் எழுப்பிய சிவில் சமூகம் இன்று நாட்டில் பலஅநியாயங்கள் நடக்கின்ற வேளை அதற்கு எதிராக குரல் எழுப்பாமல் எங்கே, என்னசெய்து கொண்டிருக்கின்றது என்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -