க.கிஷாந்தன்-
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 02.06.2016 அன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுங்காயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது….
அட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றும் கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் வைத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டர் சைக்கிளை செலுத்திய நபரே படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு விபத்துக்குள்ளாகிய நபர் பாடசாலை மாணவன் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.