எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கும் அவர் “ஜப்பான் டைம்ஸ்” இற்கு வழங்கிய செவ்வியிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டபோது தடையேற்பட்டது என தெரிவித்த அவர், மீண்டும் தான் பிரதமராக போட்டியிட எது வித தடையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஓய்வு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தான் 18 மில்லியன் டொலரை களவெடுத்ததாக தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டிள்ளது. அது நிரூபிக்கப்பட்டால் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் மீளிணைவதை தடுப்பது தனது இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.