”சாய்ந்தமருதில் அமைச்சர் ரிஷாத் பங்கேற்புடன் இப்தார்”

அஸ்லம் மெளலானா-

கில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள அம்பாறை மாவட்டத்திற்கான இப்தார் நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய (பழைய மஹருஸ் சம்ஸ் பாடசாலை) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், எம்.எச்.எம்.நபவி, இஷாக் ரஹ்மான், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார், கனிய மணல் கூட்டுத்தாப்பான தலைவரும் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பி. அப்துல் மஜீத், லக்சல தலைவரும் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் உட்பட அமைச்சின் கீழுள்ள மற்றும் பல நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். 

இந்த இப்தார் நிகழ்வுக்காக அம்பாறை மாவடடத்திலுள்ள அரச, தனியார் நிறுவங்களின் தலைவர்கள், உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், வர்த்தகப் பிரமுகர்கள், கட்சிப் போராளிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் அழைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -