திருகோணமலை ரோட்டரி கழகத்தால் செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது


திருகோணமலை ரோட்டரி கழகத்தால் வீட்டு பொருட்கள் மற்றும் நாற்காலிகள் போன்றவை செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது

திருகோணமலை கழக ரோட்டரி கழக அங்கத்தவர்களால் இரண்டு லட்சத்து பதினைந்தாயிரம் (சுள.215இ000 / ஸ்ரீ) பெறுமதியான வீட்டு பொருட்கள் மற்றும் நாற்காலிகள் போன்றவற்றை செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்துக்கு 01.06.2016 அன்று கையளித்தார்கள்.

இந்த நன்கொடை சலவை இயந்திரங்கள், நீர் பம்ப், குக்கர், மேசைகள் மற்றும் நாற்காலிகள் என பல்வேறு வகையான பொருட்கள் அடங்கும்

திருகோணமலை பிஷப் கிரிஸ் றியன் நோயல் இம்மானுவல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, ரோட்டரி தலைவர் கிறிஸ்டி ஐபோ ((B. Christy Ibo) இருந்து பொருட்களை பாரமெடுத்து இல்ல சகோதரிககளிடம் கையளித்தார்.
பிஷப் கிரிஸ் றியன் நோயல் இம்மானுவல் தனது உரையில் உண்மையிலேயே அந்த இல்லத்திற்கு இந்த பொருட்கள் தேவை என்றும் இந்த கண்ணியமான மற்றும் அன்பான நன்கொடைக்காக ரோட்டரி கழக அங்கத்தவர்களை பாராட்டுவதாக குறிபிட்டார். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -