பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை கலை இலக்கிய அபிவிருத்தி சங்கத்தின் விஷேட இப்தார் நிகழ்வு நேற்று (17-06-2016) மருதமுனை அல்மதீனா வித்தியாலயத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மூத்த எழுத்தாளரும் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியுமான எம்.சடாட்சரன் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டார். கல்முனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ்செய்க் றஷ்மி எம்.மூஸா சிறப்புப் போச்சாளராக் கலந்து கொண்டு நோன்பு பற்றி சிறப்புரையாற்றினார். இங்கு கலை இலக்கிய துறைசார்ந்த பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் பிரதித் தலைவர் ஜீனாராஜ் நன்றியுரையாற்றினார்.