மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள காத்தான்குடி நகரில் 10 வயது மாணவன் பிரத்தியேக வகுப்பு நடத்திய ஆசிரியையினால் தாக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் காத்தான்குடி-03, மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் ஷாக்கிர் ரஹ்மான் எனும் மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று காலை (11) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.tw