எப்.முபாரக்-
திருகோணமலை அக்போபுர பிரதேசத்தில் இரண்டு மாடுகளைத் திருடி விற்பனை செய்த நபர் ஒருவரை புதன்கிழமை(15) மாலையில் கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள இரண்டு மாடுகள் திருடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரேயே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேநபர் இரவு வேளைகளில் பட்டியில் உள்ள மாடுகளை திருடி வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதோடு இறைச்சிக்காகவும் மாடுகளை அறுத்தும் வந்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபருக்கெதிராக மாடு திருடிய வழக்கொன்றும் ஏற்கனவே கந்தளாய் நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று வியாழக்கிழமை (16) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.