ஸக்கியா ஸித்தீக் பரீதின் நூல் வெளியீட்டு விழா...!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
லாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீதின் ஆறாவது வெளியீடான இஸ்லாமிய தகவல் களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (04) தெமடகொட வை.எம்.எம்.ஏ பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் மண்டபத்தில் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் இடம் பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டிருந்தார். இதன்போது கௌரவ அதிதிகளாக அகில இலங்கை ஜமியதுல் உலமாவின் உப தலைவர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசியத் தலைவர் சாதிக் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட வைபவத்தில் வரவேற்புரையையும், நூல் விளக்கத்தினையும் அமீர் ஹூஸைன் வழங்கினார், வாழ்த்துரைகளை மௌலவி தாஸிம், வை.டபிள்யு.எம்.ஏயின் மாவனல்லைக் கிளையின் ஆயிஷா மஃறூப் ஆகியோரும் கவிதையை கலைவாதி கலீலும் வழங்கினார்.

இதன்போது நூலின் முதற் பிரதியை அமைச்சர் ஹக்கீமிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார். அருகில் நூலாசிரியர் ஸக்கியா ஸித்தீக் மற்றும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசியத் தலைவர் சாதிக் சலீம் ஆகியோரும் காணப்படுகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -