இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மலேசியாவில் மகத்தான வரவேற்பு..!

த்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள இராஜாங்க அமைச்சருக்கும் அவரது குழுவினருக்கும் மலேசிய வர்த்தக சம்மேளனம் இன்று பகல்போசன விருந்தளித்து கௌரவித்தது. மலேசியாவின் தலைநகரில் அமைந்துள்ள Royal Clubல் இந்த வரவேற்பு இடம் பெற்றது.

இந்த வரவேற்பின் போது இலங்கைக்கும், மலேசியாவிற்கும் இடையில் உறவுகளை வளர்த்தெடுப்பது, வர்த்தகத் துறையை முன்னேற்றுவது, இலங்கையின் கட்டுமானப் பணிகளுக்கு மலேசிய முதலீட்டாளர்களை கலந்து கொள்ள செய்வது போன்ற பல்வேறு பட்ட விடயங்கள் ஆராயப்பட்டது. 

இக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் உரையாற்றும் போது குறிப்பாக இலங்கை தற்போது மலேசியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது. மலேசியாவிற்கும், இலங்கைக்குமிடையில் வர்த்தக, பொருளாதார, கலாச்சார உறவுகளை வளர்த்தெடுப்பதற்கு என்றும் இலங்கை ஆயத்தமாக இருக்கிறது. 

ஆகவே அதற்காக இங்கிருக்கும் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய வேண்டும். அதற்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்க அரசாங்கம் ஆயத்தமாக இருக்கிறது. இலங்கையினுடைய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக குறிப்பாக முதலீட்டாளர்களுடைய ஒத்துழைப்பு அவசியம் ஆகும். 

ஆகவே இலங்கைக்கு நல்ல அரசியல் சூழ்நிலைகளையும் அரசியலில் ஈடுபடுவதற்கும் முதலீட்டாளர்களைக் கேட்டுக் கொண்டார். பல்வேறு வகையான கட்டடக் கலை மற்றும் விவசாயம் உட்பட பல்வேறு வகையான முதலீட்டாளர்கள் இப் பகல் போசன விருந்திலும் இராஜாங்க அமைச்சருக்கான கௌரவத்திலும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவை.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -