தமிழ் மொழியில் பிரிவன கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு ஆலோசனை


'அஸ்கிரிய பார்ஸே மகா நாயக்க அதி பூஞ்ச வரகாகொட ஞானரத்ன மாநாயக்க இமியன்'

தமிழ்மொழி மூலம் பிரிவன கல்வியை தொடர்வதற்கான நடவடிக்கைளை மேற் கொள்ளுமாறும் அதனை நாட்டில் நடைமுறைப்படுத்தும் சந்தர்பத்திலேயே நாட்டில் தமிழ். சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இன ஒற்றுமை அதிகரிக்கும் அதனால் இதனை உடனடியாக நடைமுறைபடுத்த நடவடிக்கை மேற்க கொள்ளுமாறு பிரதமரிடம் கூறியதாக 'அஸ்கிரிய பார்ஸே மகா நாயக்க அதி பூஞ்ச வரகாகொட ஞானரத்ன மாநாயக்க இமியன்' கூறுகின்றார். கினிகத்தன பதுபொல ஸ்ரீ சுபத்தாராமய மகா பிரிவன விகாரையில் புதிய பிரிவன கட்;டிடம் ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்துக் கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களை சேர்ந்த பிரதான விகாரைகளின் விகாராதிபதிகள், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன். அம்பகமுவ பிரதேச செயலாளர், பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி, உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அஸ்கிரிய மல்வத்து பீடாதிபதி இலங்கை திருநாட்டில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆரம்ப காலம் தொட்டு ஒன்றாக வாழந்து வருகின்றோம் அதே போல் எதிர்காலத்திலும் வாழ்வதற்து சிறுவர்களுக்கும் பழக்க வேண்டும் அவ்வாறான சந்தர்பத்தில் நாங்கள் இந்த நாட்டில் சமாதானத்துடன் நிம்மதியாக வாழ முடியும். உலகில் மனிதர்கள் மாத்திரம் அல்ல உயிர் இனங்கள் கூட நிம்மதியாக வாழ நினைக்கின்றது. எனவே அதற்கான சூழல் உறுவாக்கபட வேண்டும். 

பௌத்த மதத்தின் தத்துவங்களை ஏனைய மொழி சார்ந்த மதத்தினர் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் பிரிவனைகளில் தமிழ் மொழியில் பிரவனை கல்வி தொடர வேண்டும் அதனையே அமுல்படுத்துமாறு பிரதமரிடம் கூறியுள்ளேன். அவை நடைமுறைப்படுத்தபடுமானால் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை குறைக்கும். சமாதானம் நிலைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று கூறினார்.

தொடர்ந்து கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கருத்து தெரிவிகையில். தற்போது நாட்டில் மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் காரணமாக தற்போது நாட்டில் சுகவாழ்வு காணப்படு;கின்றது. அன்மை காலங்களில் அவை அதிகமாக காணப்பட்ட போதும் தற்போது அவை படிப்படியாக குறைந்துள்ளது. அதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கமும் ஒரு காரணமாக இருக்கின்றது. தற்போது நாட்டில் தற்போதைய ஜனாபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் அனைத்து மதங்களுக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளார். 

அந்த அந்த மதங்களின் விவகாரங்களுக்கு அமைச்சுகளையும் அமைச்சர்களையும் வழங்கியுள்ளார். அதனால் மதங்களுக்கு இடையில் பிரச்சனைகள் இன்றி வாழ கூடிய நிலை தோன்றியுள்ளது. இதனை வழுப்பெறச் செய்ய அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என கூறினார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -