யாழ் முஸ்லீம்களுக்கு பேரிச்சம் வழங்குவதில் குழறுபடி - பள்ளிவாசல்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு

வூதி அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட பேரீத்தம் பழம் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு இன்னும் வழங்கப் படவில்லை என யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் அங்கம் வகிக்கும் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது .

இவ் விடயம் தொடர்பாக யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜமால் மொகைதீன் செயலாளர் சுவர்ஹஹான் ஆகியோர் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் 

நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு பேரீத்தம் பழம் விநியோகிக்கும் நடவடிக்கை புனித நோன்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற யாழ் மாவட்டத்திற்கு சுயநலமிக்க தனிநபர்களின் ஊடாக விநியோகம் செய்யப்படவுள்ளதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்துடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அற்ற இம்மாவட்டத்தை தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஒருவரும் வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் இணைந்து பதியப்படாத ஒரு அமைப்பின் ஊடாக விநியோகிக் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நடவடிக்கை குறித்து மக்கள் விசனத்தை தெரிவித்துள்ளனர்.

வழமையாக இச்சம்மேளனத்தின் ஊடாகவே பேரிச்சம் வழங்கல்கள் நடைபெற்று வந்தன.
ஆனால் இம்முறை அரசியல் தலையீடு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த கிழமை நாட்களில் முஸ்லீம் விவகார கலாசார அமைச்சர் ஹலீம் கட்சி அரசியலுக்கு அப்பால் பேரிச்சம் பழ விநியோகம் சிவில் அமைப்புகளின் ஊடாக பள்ளிவாசல்களிற்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

எனினும் அவை நடந்த பாடில்லை.குறிப்பிட்ட யாழ் முஸ்லீம் மக்களிற்கு பேரிச்சம்பழங்களை சம்மேளனத்தின் ஊடாக வழங்க வேண்டும் என அமைச்சர் முடிவெடுத்த போதிலும் அமைச்சருக்கு தெரிவிக்காமல் வக்பு சபை பணிப்பாளர் என உள்ள சமீல் என்பவர் தனது அதிகாரத்தை பாவித்து தனிப்பட்ட அமைப்பின் கடிதத்தலைப்பை உள்வாங்கி பதியப்படாத அமைப்பு ஒன்றிற்கு பாரப்படுத்தியுள்ளார்.

இதனால் சம்மேளனம் வழங்கிய அதாவது ஜம்மியத்துல் உலமா ஊடாக வழங்கப்பட்ட கடிதம் நிராகரிக்கப்பட்டு மற்றுமொரு அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் சகல பள்ளிவாசல்களும் குறித்த பேரிச்சம் பழங்களை பெற முடியாமல் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளன.
இது தவிர மேற்குறித்த பேரிச்சம்பழங்களை மீளவும் சம்மேளனத்தின் ஊடாகவோ யாழ் உலமா சபை கிளையின் ஊடாகவோ வழங்கினால் சகல பள்ளிவாசல்களும் கிரமமாக பேரிச்சம்பழம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

தற்போது யாழ் மாவட்ட மக்களிற்கு வழங்கப்பட்ட பேரிச்சம்பழங்கள் விநியோகம் மொட்டைக்கடிதத்துடன் தனி நபரினால் முன்னெடுக்கப்படுவதை சுட்டிக்காட்டுகின்றோம்.

அத்துடன் மக்கள் ஒன்றினைந்து வக்பு சபை பணிப்பாளருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள ஆயத்தமாகியுள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பாக முஸ்லீம் விவகார கலாசார அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -