இம்மாதத்தில் தர்மத்தை தாராளமாக கொடுத்து அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலியை பெற்றுக்கொள்வோம் - அமைச்சர் ஹக்கீம்

ஜெம்சாத் இக்பால்-
ம்மாதத்தில் கொடுக்கப்படுகின்ற தர்மத்தை மிகவும் தாராளமாக கொடுத்து அல்லாஹ்விடத்தில் அதற்கான மகத்தான கூலியை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் புதன்கிழமை (29) கொழும்பு 6 வெள்ளவத்தையில் அமைந்துள்ள தி எக்சலன்சி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

இந்த ரமழான் மாதத்தின் மூலம் நாங்கள் முக்கியமான மூன்று விடயங்கள் எம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. அவற்றில், முதலாவது நாம் தூய எண்ணத்துடன் மேற்கொள்ளும் நற்செயல்களின் மூலம் ஆன்மாவை தூய்மைப்படுத்துகின்றோம். இரண்டாவது சகிப்புத் தன்மையுடன் செயற்பட்டு எமது உடலை தூய்மைப்படுத்துகின்றோம். மூன்றாவது தாராளத் தன்மையுடன் வழங்கும் தர்மங்களின் மூலம் எமது செல்வத்தை தூய்மைப்படுத்துகின்றோம்.

இம்மாதத்தில் தேவையானோருக்கு வழங்கப்படும் தர்மத்தை மிகவும் தாராளமாக கொடுத்து அல்லாஹ்விடத்தில் அதற்கான மகத்தான கூலியை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். 

அதுபோலவே, சகிப்புத் தன்மையையும் நாம் பேண வேண்டியது அவசியமாகும். புனித ரமழான் மாதத்தில் பசியை மாத்திரம் சகித்துகொள்ளாமல், கோபத்தைக் கட்டுப்படுத்தி, மற்றவர்களோடு முரண்படுவதை இயன்றவரை தவிர்த்து நடப்பதில் அவதானத்தை செலுத்த வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதி அமைச்சர் பைசல் காசிம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹ்மட், பாராளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலான, எம்.எச்.எம்.சல்மான், முன்னாள் வர்த்தக வணிக அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர், வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சின் செயலாளர் என்.டீ.ஹெட்டி ஆராச்சி, ஜெய்க்கா வதிவிடப் பிரதிநிதி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொறியியலாளர் கே.ஏ.அன்சார், உப தலைவர் சபீக் ரஜாப்தீன், தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஏ.எல்.எம்.லத்தீப், பொது முகாமையாளர்கள், பணிப்பாளர்கள், பிரதி முகாமையாளர்கள், உலமாக்கள், உட்பட உயர் அதிகாரிகள் பலர் பங்குபற்றினர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -