அப்துல்சலாம் யாசீம்-
நல்லாட்சியில் நாங்கள் முதலாவது கேட்ட கோரிக்கை பாதுகாப்புப் பிரிவை வகித்திடாத சிவில் ஆளுநர் ஒருவர் தேவை என்பதைத்தான். நாங்கள் அதனைத் தற்போது கொண்டுவந்துள்ளேம். ஆனால் அந்த ஆளுநரினதும் சுபாவம் மாறியதா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கின்றது. அதனை நாம் பக்குவமாகக் கையாள வேண்டும். எங்கட முலமைச்சர் ஒரு இடத்தில் பக்குவம் தவறிட்டார் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புல்மோட்டையில் இப்தார் நிகழ்வின் போது (17) தெரிவித்தார.
கடந்த மாதம் ஒரு புரலி கிழம்பியது. பிரச்சினை வாரதெல்லாம் இரானுவ விடயமாகத்தான் போகுது. தவறியும் கொஞ்சம் கோபமாகப் பேசமுடியாது நிலை உள்ளது. தவறியும் பேசினால் நாடே அதிர்ந்துபோகும் அளவிற்கு ஆர்பாட்டம் வருகின்றது.
இது இந்த நாட்டிலுள்ள ஒரு சிக்கலான விடயம். அந்த நிகழ்வின் பின்னர் வழமையான பிரசித்தியை விட பல மடங்கு உலகமெல்லாம் தெரியும் அளவிற்கு இந்த முதலமைச்சர் பிரசித்தியடைந்து விட்டது மட்டுமல்லாது கொஞ்ச நாள் எல்லாக் காட்டுனிலும் வந்து அதன் கதாநாயகனாககவும் மாறியிருந்தார்.
அதன் சாதக பாதகங்களைப் பிறகு கதைக்கலாம். அதுவல்ல பிரச்சினை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி வேறு தலையீடுகள் இல்லாமல் உள்ளதா என்பதுதான் கேள்வி. இது வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதில்தான் முஸ்லிம் காங்கிரஸ் தீவிரமாக அரசியலில் அடுத்த கட்ட நகர்வினை யோசிக்க கூடியதாக உள்ளது.நாங்கள் வகுக்கும் வியுகங்கள் சந்தர்ப்பவாத, தேர்தல் காலத்தில் செய்கின்ற வேளையாக இறாது. என்றார்.
நல்லாட்சியைக் கொண்டு வந்தாச்சி, ஒரு பிஸாசை விரட்டியாச்சி. திரும்பியும் அந்த பிசாசி வாரமாதிரி பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாங்கள் கொஞ்சம் பக்குவமாக இருக்கவேண்டும். ஆனால் கெடு பிடிமிக்க மேலாதிக்க வாதிகளின் பிடியிலிருந்து இந்த மண்ணிலேஇருக்கின்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வரவேண்டும். இது இலேசாக இந்த நல்லாட்சியில் இது இரவோடு இரவாக செய்யக் கூடியதொன்றல்ல.
நடந்த பிரச்சினைகள் இவ்வளவு புதகரமாக வருவதற்கு, ஒரு சம்பவம் ஒரு சரித்திரமாகத்தான் வர வேண்டும் ஆனால் இது என்ன காரணம் என்று கேட்டால் அது இனவாதமல்லாது வேரொன்றல்ல என்று எல்லாருக்கும் புரிந்திருக்க வேண்டும்.அது நடு நிலைவாதிகளாக சிந்திக்கின்ற எந்த இனத்தவரைச் சார்ந்தவராக இருந்தாலும் அது விளங்கும் .வடக்கிலுள்ள பிரச்சினைகள் உள்ள மாதிரி கிழக்கிலும் நாங்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றோம் என்று அண்மையில் நான் பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன். இது கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆனைக்குழு என்று சொல்லி அதில் இருக்கின்ற சிபார்சுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெனீவாவில் இந்த அரசாங்கத்திற்கு கொடுக்கப்படுகின்ற அந்த பிரேரணையிலான உத்தரவு நடைமுறைப்படுத்துகின்றபோது இதற்கான முக்கிய இடம் புல்மோட்டைக்கு உள்ளது. முப்பதேக்கர் காணி பாதுகாப்புக்குத் தேவை என்று அடைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு விஸ்தீரணம் தேவையா என்ற கேள்வியும் உள்ளது. இன்னும் 10 ஏக்கர்காணி விசேட அதிரடிப்படையினருக்கும் எடுக்கபடவுள்ளது.
ஆனால் அடிக்கடி வலிகாமம் வடக்கில் எப்போதும் காணிப் பிரச்சினைகள் கதைக்கப்படுகின்றது போல் புல்மோட்டையிலிருந்து பொத்துவில் வரை முழு கிழக்கு மாகாணத்திலும் அதே மாதிரியான காணிப்பிரச்சினை உள்ளது. இங்கு உள்ள எல்ல இரானுவ முகாமிலும் தேவைக்கு மேலதிகமாகக் மக்களுடைய காணிகள் பயிற்ச் செய்கைக்காக வேலி அடைக்கப்பட்டு உட்புகுதல் தடை என போடப்பட்டுள்ளது.
முன்னைய ஆட்சியில் என்றால் சகித்துக் கொண்டிருக்கலாம். இந்த ஆட்சியிலும் இது நடப்பதால் மக்கள் கேள்வி கேட்ட ஆரம்பித்துள்ளார்கள் . இதற்கான கேள்விகளுக்கு தலைமைகள் விடைகாணவேண்டும் என்கின்றனர் மக்கள். எல்லாவற்றுக்கும் பேரம் பேசும் அரசியல் சக்தி எங்களிடம் இருக்க வேண்டும். நாங்கள் ஒரு காலமும் வெற்றிலையுடன் போய் சரனடைய வில்லை. எங்கள் சொந்த சின்னத்திலே கேட்பது இல்லையென்றால் எதிர்கட்சியிலே ஐ.தே.க உடன் சேர்ந்து கேட்பது என்பதிலேதான் எங்களுடைய அனுகுமுறை இருந்தது.
அதற்கு மேலாக வேறு வியுகங்களையும் நாங்கள் போடலாம் .ஜனாதிபதியும் பிரதமரும் இந்த நல்லாட்சியில் இஇந்த புதிய தேசிய ஆட்சியில் உளப்புர்மாக கொஞ்சம் கூடச் சிலதைச் செய்ய வேண்டும்.இந்த ஆட்சியில் அமர்த்தியவர்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினர்கள் என்ற பாரிய நல்லென்னம் இந்த ஜனாதிபதியிடம் இருக்கின்றது.இதன் வெளிப்பாடாக வடக்கின் குடியேற்றம் சம்பந்தமான விடயங்களையும் காணி விடுவிப்பு விடயங்களையும் ஜனாதிபதி அவர் நேரடியாக தலையிட்டு தன்னுடைய தலைமையில் ஆளணி அமைத்து அவர் செயற்பட்டு வருகின்றார். அவருடைய கவனம் இப்போது கிழக்கு மாகாணம் மீது உள்ளது. இங்கும் தனியார் காணிகள் எல். டி. ஓ. அனுமதி உள்ள காணிகள் மாறி காலத்தில் சேனை செய்கின்ற காணிகள் யுத்தம் முடிவடைந்து நல்லிணக்கம் வந்தும் இன்னும் இல்லையென்றால் அது சம்பந்தமாக ஒரு தீவிர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
கிழக்கு மாகாண காணி ஆணையார் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் முதலமைச்சர் கூடி முதலில் சில பிரச்சினகளுக்குத் தீர்வு காணலாம். பாதுகாப்பு அமைச்சோடு சேர்ந்து நாங்கள் ஒரு பேச்சுவார்த்தை செய்ய வேண்டும். பாதுகாப்புச் அமைச்சின் செயலாலரையும் அழைத்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசி புல்மோட்டையில் பல இடங்களிலுமுள்ள பிரச்சினைகளை சிக்கள்ளை தீர்பதற்கு விரைவாக நாங்கள் ஒரு கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும்.
பாதுகாப்புக்கு குந்தகமாக நாங்கள் ஒருபோதும் இருக்க விரும்பவில்லை. உக்கிரமான யுத்தம் இருந்த வேளையில் மிக நெருக்கடிக்குள் மாட்டிய மக்கள் இந்த புல்மோட்டை மக்கள் .ஒரு பக்கம் விடுதலைப்புலி மறு பக்கம் இரானுவம்.அந்தக் காலங்களில் நானும் பலமுறை இந்த புல்மோட்டைக்குப் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் ஹெலிகப்டர் மூலம் வந்து ள்ளேன். அந்தக் காலத்தில் செய்ய முடிந்ததை இந்தக் காலத்தில் செய்ய முடியாத ஒரு நிலவரம் வார அளவுக்கு கெடுபிடி நிலவரம் இருக்க முடியாது. இதற்கு நல்ல அனுகு முறையில் தீர்வு காணப்பட வேண்டும்.இதற்றகு அரசியற் பிரமுகர்களும் மேடையிலுள்ள அனைவவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனத் அமைச்சர்தொடர்ந்து உரையாற்றம்போது தெரிவித்தார்.
இதில் கிழக்கமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பாராள உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்ஜேவர் சட்டத்தரனி.எம்.லாஹிர் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் நிதாவுல் ஹைர் நிறுவனத்தின் மாணிய உதவி வழங்குகின்ற பைஸல் விலாஹி பீஸ் நிறுவனத்தின் திட்டப் பொறுப்பாளர் நியாஸ் நீர் வழங்கள் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.