ஜே .எம் .வஸீர்-
மூத்த தொழில் சங்க வாதியும் மூத்த அரசியல் வாதியுமான அஷ் - ஷெய்க் அளவி மௌலானா அவர்களின் மரணச்செய்தி கேட்டு பெரும் துயரமடைந்தேன்.
பரம்பரை பரம்பரையாக இலங்கையில் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்த ஒற்றுமைக்கு காரணமாக மூத்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருந்ததிருகின்றனர். நாட்டில் சிங்கள தலைமைகலோடும் ,சிங்கள மக்கலோடும் அண் யொனியமாகவும் முன்மாதிரியாகவும் அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள். அவ்வப்போது ஏற்ப்படுகின்ற பிரச்சினைகளின் போது உணர்ச்சி ரீதியாக அல்லாமலும் அரசியல் இலாபங்கள் அறவே இல்லாமலும் தூர நோக்கோடு மனச்சாட்ச்சிக்கு விரோதமில்லாமலும் நாடுப்பற்றுள்ளவர்காளவும் இருந்து முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அந்த முடிவுகள் உலகம் அழியும் வரை தெற்க்கில் சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் நிம்மதியாக வாழ வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலும் அமையப்பெற்றிருந்தன .இதனால் நமது நாட்டில் சிங்கள,தமிழ் ,முஸ்லிம் மக்களிடையில் உறவுகளில் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கின்ற நிலைமைகள் இல்லாது இருந்தது .
அப்படியான தலைமைகள் வரிசையில் அஷ் - ஷெய்க் அளவி மௌலானா அவர்கள் முக்கிய இடம் பெற்றார். இவருடைய இழப்பை தொடர்ந்து தெற்கில் இவ்வாறான ஒரு தலைமை இனியும் தோன்றுமா என்ற சந்தேகமும் எம்முல் எழத்தான் செய்கிறது .இன்று நாடு முகம் கொடுத்துக்கொண்டிருன்கின்ற இவ் வரலாற்றுக் காலத்தில் அன்னாரின் இழப்பு இன் நாட்டுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் .
நல்ல அரசியல் தலைவராகவும் ,தொழிற்சங்க வாதியாகவும் நமக்கெல்லாம் ஒரு சிறந்த தந்தையாகவும் இவற்றுக்கு மேலாக நல்ல ஆத்மவாதியாகவும் வாழந்து காட்டிய அன்னாருடனான நமது உறவுகள் பசுமையாகவே இருக்கும். அன்னாருக்காய் பிரார்த்திப்போம் .
அன்னாரை இழந்து தவிர்க்கும் குடும்பத்தினருக்கு, எனதும் ,மக்களினதும் ஆழ்ந்த அநுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன் .
ஜென்னதுள் பிர்தௌஸ் அன்னாருக்கு கிடைக்கும் .....ஆமீன்
ஏ.எல்.எம்.அதாஉல்லா,
தலைவர் -தேசிய காங்கிரஸ்,
முன்னாள் அமைச்சர்.