இலங்கை அணியின் பந்துவீச்சை நாலா புறமும் விரட்டியடித்த இங்கிலாந்து அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் 95 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்து 10 விக்கெட்டுகளால் 2 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நேற்று இங்கிலாந்தின் பேர்மிங்காம், எட்பார்ஸ்டனில் இடம்பெற்றது.
இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரவு-பகல் ஆட்டமாக இடம்பெற்ற 2 ஆவது போட்டியியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்படட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது.
உப்புல் தரங்க ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் ,சந்திமால் 52 ஓட்டங்களையும், மத்தியூஸ் 44 ஓட்டங்களையும் இலங்கை அணி சார்பாக பெற்றுக்கொடுத்தனர்.
இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் புலுங்கெற் மற்றும் ரஷ்ஹிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்படி இங்கிலாந்து அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய களமிறங்கிய இலங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் நிதானமான ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் விக்கெட் இழப்பின்றி 256 ஓட்டங்களைக் கடந்து வெற்றி பெற்றது.
இப் போட்யில் இலங்கையின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த நிலையில், எந்தவொரு விக்கெட்டையும் அவர்களால் கைப்பற்ற முடியாது போயிருக்கிறது.
34.1 ஓவர்களை மட்டுமே சந்தித்த இங்கிலாந்து அணி போட்டியில் இலகுவாக வெற்றி பெற்றது.
ஆரம்ப வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், மற்றும் ஜேசோன் ரோய் ஆகியோர் ஆட்டமிழக்காது முறையே 133, 112 ஓட்டங்களைப் பெற்றுக் பொடுத்தனர்.
இந்நிலையில், வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகையில், விக்கெட் இழப்பின்றி பெரியதொரு ஓட்ட எண்ணிக்கை பெற்றுக்கொண்ட சாதனையையும் இந்த ஜோடி தாமதாக்கியுள்ளது.
முதலாவது ஒருநாள் போட்டியின் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்து போட்டியை சமன் செய்த இங்கிலாந்து, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிக்குமிடையிலான 3 ஆவது போட்டி நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.