பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகே அப்பர்தேவா கிராமத்தை சேர்ந்த பெண் மரியா சதகத்(வயது 19).
இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகனுக்கு மரியாவை திருமணம் செய்து கொள்ள ஆசை, எனவே திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தோடு மரியாவிடம் சம்மதம் கேட்டுள்ளார்.
ஏற்கனவே விவாகரத்தான அவருக்கு மரியாவை விட இருமடங்கு வயது அதிகம். எனவே கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இந்த விவகாரம் தலைமை ஆசிரியருக்கு தெரியவரவே அவர் மரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தித்துள்ளார்.
அவரும், நான்கு நபர்களும் சேர்ந்து கொண்டு மரியாவை கொடுமைப்படுத்தியதுடன், உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மரியாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.